இந்திய தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் (டிராய்) தொலைத்தொடர்பு வணிக தகவல் தொடர்பு வாடிக்கையாளர் முன்னுரிமை ஒழுங்குமுறை, 2018 மறுஆய்வு குறித்த ஆலோசனை அறிக்கையை வெளியிட்டுள்ளது.ஆலோசனை அறிக்கையில் பங்குதாரர்களால் எழுப்பப்பட்ட பிரச்சினைகள் குறித்த கருத்துகளை சமர்ப்பிப்பதற்கான கடைசி தேதி, 2024 செப்டம்பர் 25 மற்றும் எதிர் கருத்துகளுக்கு 2024 அக்டோபர் 9-ம் தேதி ஆகும்.
இந்த அறிக்கை, மிகவும் விரிவானதாகவும், பெருமளவில் இருப்பதாலும், விரிவான விவாதங்கள் தேவைப்படுவதாலும், விவாதித்து பதிலளிக்க அதிக நேரம் தேவைப்படுவதாலும், கருத்து தெரிவிப்பதற்கான கால அவகாசத்தை நீட்டிக்குமாறு சம்பந்தப்பட்டவர்களிடமிருந்து பெறப்பட்ட கோரிக்கைகளை கருத்தில் கொண்டு, ஆலோசனை அறிக்கையில் எழுப்பப்பட்ட பிரச்சினைகள் மீது கருத்துக்களை தெரிவிப்பதற்கான கடைசி தேதியை 2024 அக்டோபர் 9-ம் தேதி வரையும், எதிர்கருத்துக்களுக்கு 2024 அக்டோபர் 16-ம் தேதி வரையும் நீட்டிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
கருத்துகள் மற்றும் எதிர் கருத்துகளை மின்னணு வடிவில், டிராய் இணையதளத்தில் குறிப்பிட்ட டெம்ப்ளேட்டில் advqos@trai.gov.in என்ற முகவரிக்கு நகலிட்டு அனுப்பலாம். ஏதேனும் விளக்கம் தகவலுக்கு, திரு ஜெய்பால் சிங் தோமர், ஆலோசகர் (QoS-II) அவர்களை மின்னஞ்சல் advqos@trai.gov.in-ல் தொடர்பு கொள்ளலாம்.
இது தொடர்பாக மேற்கொண்டு கால நீட்டிப்பு வழங்கப்பட மாட்டாது.
திவாஹர்