25.09.2024 தேதியிட்ட தேர்தல் ஆணையத்தின் இரண்டு செய்திக் குறிப்புகள் எண் 139 & 140-ன் தொடர்ச்சியாக, இன்று வெளியிடப்பட்டுள்ள செய்திக் குறிப்பில், இரண்டாம் கட்ட தேர்தலில் 57.31 சதவீத வாக்குகள் பதிவாகி உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நடந்து வரும் ஜம்மு & காஷ்மீர் சட்டமன்றத் தேர்தல் 2024-ல் 26 சட்டப்பேரவை தொகுதிகளில் இரண்டாம் கட்டத் தேர்தல் நடைபெற்றது. இந்தத் தேர்தலில் பாலின வாரியாக வாக்களித்த புள்ளிவிவரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
கட்டம் | ஆண் வாக்காளர்கள் |
பெண் வாக்காளர்கள் | மூன்றாம் பாலினத்தவர் | மொத்த வாக்குப்பதிவு |
கட்டம் 2(26 தொகுதிகள்) | 58.35% | 56.22% | 30.19% | 57.31% |
காலை 9.30 மணி முதல் 2 மணி நேரத்திற்கு ஒருமுறை வாக்குப்பதிவு செயலி மூலம் வாக்குப்பதிவு மையங்களில் வாக்குப்பதிவு நடப்புகளை தேர்தல் ஆணையம் கண்காணித்து வருகிறது. அனைத்து வாக்குச்சாவடிகளிலும் வாக்குப்பதிவு, வேட்பாளர்கள் / அவர்களின் அங்கீகரிக்கப்பட்ட முகவர்கள் முன்னிலையில் நிறைவடைந்துள்ளதாக ஜம்மு காஷ்மீர் தலைமை நிர்வாக அதிகாரி உறுதிப்படுத்தியுள்ளார்.
எஸ்.சதிஸ் சர்மா