மத்திய கல்வி அமைச்சகத்தின் பள்ளிக் கல்வி மற்றும் எழுத்தறிவுத் துறை (DoSEL), உத்தரபிரதேசத்தின் பிரயாகராஜ் மற்றும் வாரணாசி மாவட்டங்களின் பிரத்யேக நிறுவன அதிகாரிகள் (INOs) மற்றும் நிறுவனங்களின் தலைவர்களுக்கு (HoI) ஒரு பட்டறை / பயிற்சிக்கு ஏற்பாடு செய்திருந்தது. 2024-25 திட்ட ஆண்டிற்கான தேசிய உதவித்தொகை இணைய தளத்தில் (NSP) விண்ணப்பம் மற்றும் சரிபார்ப்பு செயல்முறையை நிறைவு செய்வதை எளிதாக்குவதை, இந்த முயற்சி நோக்கமாகக் கொண்டுள்ளது.
பிரயாக்ராஜில் உள்ள NMMSS-ன் நிறுவன நோடல் அதிகாரிகளுக்கான (INOs) மாவட்ட அளவிலான பட்டறை 10 செப்டம்பர் 2024 அன்று பிரயாக்ராஜில் உள்ள உளவியல் பணியகத்தில் நடத்தப்பட்டது. இதற்கு DoSEL -ன் துணைச் செயலாளர் திருமதி ஹேமமாலினி SK தீபக் தலைமை தாங்கினார். என்.எம்.எம்.எஸ்.எஸ் மாநில நோடல் அதிகாரி, திருமதி உஷா சந்திரா, இயக்குநர், உளவியல் பணியகம், உத்தரபிரதேச அரசு மற்றும் என்.எம்.எம்.எஸ்.எஸ் மாவட்ட நோடல் அதிகாரி (பிரயாக்ராஜ்) ஆகியோர் நேரடி முறையில் பட்டறையில் இணைந்தனர். இக்கூட்டத்தில் மாவட்ட மாவட்ட தகவல் அலுவலர்கள் மெய்நிகர் முறையில் பங்கேற்றனர்.
2024-25-ம் ஆண்டிற்கான புதிய மற்றும் புதுப்பித்தல் NMMSS விண்ணப்பங்களின் நிலையை மதிப்பாய்வு செய்வதற்கும், NSP மீதான பதிவு மற்றும் சரிபார்ப்பு செயல்முறையை விரைவுபடுத்துவதற்கும், பதிவின் போது எழும் தொழில்நுட்ப கேள்விகளை சரிசெய்வதற்கும் இந்த பட்டறை நடைபெற்றது.
எம்.பிரபாகரன்