இரயில்வே அமைச்சகம், கவரப்பேட்டை இரயில் விபத்து போன்று மீண்டும் நடைபெறாதவாறு உரிய நடவடிக்கையை எடுக்க வேண்டும்!- ஜி.கே.வாசன் வலியுறுத்தல்

திருவள்ளுர் மாவட்டம் கவரப்பேட்டையில் தண்டவாளத்தில் நின்று கொண்டு இருந்த சரக்கு ரயிலின் மீது மைசூர் தர்பங்கா பாக்மதி விரைவு ரயில் மோதியது அறிந்து மிகவும் அதிர்ச்சியுற்றேன்.

இந்த ரயில் விபத்தில் அதிஷ்டவசமாக உயிர்சேதம் இல்லை என்ற செய்தி ஆறுதல் அளிக்கிறது. அதோடு விபத்தில் 20 க்கும் மேற்பட்டோர் காயமடைந்து மருத்துவனையில் சிகிக்சை பெற்றுவருகிறார்கள். அவர்கள் அனைவரும் விரைவில் குணம் அடைந்து வீடுதிரும்ப வேண்டும் என்று இறைவனிடம் பிராத்திக்கின்றேன்.

இரயில்வே அமைச்சகம் ரயில் விபத்திற்கான காரணங்களை அறிந்து இதுபோல் மீண்டும் நடைபெறாதவாறு தவறிழைத்தவர்கள் மீது உரிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். தடம்புரண்ட ரயில் பெட்டிகளை உடனடியாக அப்புறப்படுத்தி ரயில்வே பாதையை சீர்செய்ய வேண்டும். விபத்தான ரயிலில் பயணம் செய்த பயணிகளுக்கு மாற்று ஏற்பாடு செய்ய வேண்டும். இந்த ரயில்வே பாதையில் மேலும் பயணம் மேற்கொள்ள இருக்கும் பயணிகளுக்கு உனடியாக உரிய தகவலையும், மாற்று ஏற்பாடுகளையும் செய்ய வேண்டும்.

திருச்சி ஏர்போட்டில் இருந்து நேற்று மாலை 144 பயணிகளுடன் சார்ஜாவிற்கு சென்ற ஏர்இந்தியா விமானத்தில் ஏற்பட்ட தொழிநுட்ப கோளாரு காரணமாக விமான சக்கரங்கள் இயங்காததை கண்டுபிடித்த விமானி விமானத்தை சாதுர்யமாக மீண்டும் திருச்சி ஏர்போர்ட்டில் விபத்து இல்லாமல் தரையிறக்கி அனைவர் உயிரையும் காப்பாற்றிய விமான பைலட்டுக்கும், தொழில்நட்ப வல்லுனர்களுக்கும் தமிழ் மாநில காங்கிரஸ் சார்பாக வாழ்த்துக்களையும், பாராட்டுகளையும் தெரிவித்துக்கொள்கிறேன்.

இவ்வாறு தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் தமது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

Leave a Reply