பஹ்ரைன் மற்றும் ஐக்கிய அரபு எமிரேட்ஸுக்கு முதல் பயிற்சி படைப்பிரிவு பயணம்.

பாரசீக வளைகுடாவில் நீண்ட தூர பயிற்சியைத் தொடர்ந்து, இந்தியக் கடற் படைக் கப்பல்  திர்,  முதல் பயிற்சி படைப்பிரிவின் இந்தியக் கடலோரக் காவல் படைக் கப்பல் வீரா ஆகியவை  அக்டோபர் 12 அன்று பஹ்ரைனின் மனாமா துறைமுகத்தை வந்தடைந்தன. இவை கடற்படை ஒத்துழைப்பை மேம்படுத்தவும், இயங்கும் தன்மையை மேம்படுத்தவும், இந்தியக்  கடற்படை ராயல் பஹ்ரைன் கடற்படையுடன் கடல்சார் நடவடிக்கைகள் மற்றும் சிறந்த பகிரப்பட்ட நடைமுறைகளின் பல்வேறு களங்களில் ஈடுபட உள்ளன. தொழில்முறை கலந்துரையாடல்கள்,  கப்பல்களுக்கிடையே பயணம் , கூட்டு பயிற்சி அமர்வுகள், யோகா அமர்வுகள், இசைக்குழுவின் இசை நிகழ்ச்சிகள், நட்பு விளையாட்டு , சமூக தொடர்புகள் மற்றும் சமூக நல நடவடிக்கைகள் திட்டமிடப்பட்டுள்ளன.

கடல்சார் கூட்டாண்மை பயிற்சியைத் திட்டமிடுவதற்கும் நடத்துவதற்கும் இரு கடற்படைகளின் செயல்பாட்டுக் குழுக்களுக்கு இடையிலான ஒருங்கிணைப்புக் கூட்டமும் திட்டமிடப்பட்டுள்ளது.

மற்றொரு பயணத்தில், ஐ.என்.எஸ் ஷர்துல் 1 டிஎஸ் ஐக்கிய அரபு எமிரேட்ஸின் துபாய் துறைமுகத்தில் நுழைந்தது. இந்த கப்பலை இந்திய தூதரகத்தில் உள்ள பாதுகாப்பு இணைப்பாளர் மற்றும் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் கடற்படை அதிகாரிகள் வரவேற்றனர். இந்த பயணத்தின் போது, கப்பல் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் கடற்படையுடன் பல்வேறு பயிற்சி நடவடிக்கைகள் மற்றும் துறைமுக தொடர்புகளில் ஈடுபடும்.

பஹ்ரைன் மற்றும் ஐக்கிய அரபு எமிரேட்ஸுடன் இந்தியாவின் வளர்ந்து வரும் பாதுகாப்பு உறவுகளை இந்த பயணம் சுட்டிக்காட்டுகிறது, அதே நேரத்தில் கடல்சார் பாதுகாப்பு ஒத்துழைப்பு மற்றும் கடற்படைகளிடையே ஒருங்கிணைப்பை மேம்படுத்துகிறது.

Leave a Reply