தில்லி பல்கலைக்கழக மாணவர்களிடையே உரையாற்றிய மத்திய அறிவியல் தொழில்நுட்பத்துறை இணையமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங், பிரதமர் திரு நரேந்திர மோடியின் கனவான, 2047-க்குள் வளர்ச்சியடைந்த இந்தியாவை உருவாக்குவதற்கான ஒளி ஏற்றுபவர்களாக மாணவர்கள் திகழ்கின்றனர் என்றார்.
தில்லி பல்கலைக்கழகத்தின் தௌலத் ராம் கல்லூரியில் மாணவர்களுக்கான சான்றிதழ் வழங்கும் நிகழ்ச்சியில் பேசிய அவர், கடந்த 10 ஆண்டுகளில் மேற்கொள்ளப்பட்ட சீர்திருத்தங்கள் இந்திய இளைஞர்களிடையே தன்னம்பிக்கையை ஏற்படுத்தியிருப்பதுடன், அவர்களது திறமையை உலக அளவில் உயர்த்தியிருப்பதாக குறிப்பிட்டார்.
இளைஞர்கள் மற்றும் மாணவர்களின் நலன்களுக்காக மத்திய அரசால் கடந்த 10 ஆண்டுகளில் மேற்கொள்ளப்பட்ட பல்வேறு நடவடிக்கைகளையும் அமைச்சர் எடுத்துரைத்தார். 2014-க்கு முன்பு மோசமான ஐந்து நாடுகளில் ஒன்றாக இருந்த இந்தியா, தற்போது முதல் ஐந்து நாடுகளில் ஒன்றாக உயர்ந்திருக்கும் இந்தப் பயணம் வியப்புக்குரியது என்றும் அவர் கூறினார். தற்போதைய மத்தியஅரசு பொறுப்பேற்ற முதல் 100 நாட்களில் 15 லட்சம் கோடி ரூபாய் மதிப்பிலான கட்டமைப்புத் திட்டங்களுக்கும், 12 தொழிற்சாலைகளைத் தொடங்கவும் ஒப்புதல் அளித்திருப்பதாகத் தெரிவித்தார். இதன் மூலம் 40 லட்சம் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்புக் கிடைக்கும் என்றும் அவர் கூறினார்.
திவாஹர்