நிர்வாக சீர்திருத்தம் மற்றும் பொதுமக்கள் குறைதீர்ப்புத் துறையின் வழிகாட்டுதலின் கீழ், தொழில் மற்றும் உள்நாட்டு வர்த்தக மேம்பாட்டுத் துறை, அதன் துணை நிறுவனங்களுடன் இணைந்து தூய்மைப்பணியை மேற்கொள்ளவும், நிலுவையிலுள்ள பணிகளைக் குறைக்கவும் சிறப்பு இயக்கம் 4.0 ஐ செயல்படுத்தி வருகிறது. இந்த இயக்கம் செயல்படுத்தப்பட்ட முதல் பதினைந்து நாட்களை நிறைவு செய்துள்ளது. இந்த காலகட்டத்தில், தொழில் மற்றும் உள்நாட்டு வர்த்தக மேம்பாட்டுத்துறை, விஐபி குறிப்புகள், பிரதமர் அலுவலக குறிப்புகள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் குறிப்புகள், மாநில அரசு குறிப்புகள், அமைச்சரவை குறிப்புகள், பொதுமக்கள் குறைகள் / மேல்முறையீடுகள் தொடர்பான நிலுவையில் உள்ள அனைத்து ப்பணிகளையும் அடையாளம் கண்டுள்ளது. மேலும், 170 தூய்மை முகாம்கள் இத்துறையால் நடத்தப்பட்டுள்ளன.
இந்த இயக்கத்தின் போது, பணிச்சூழலின் ஒட்டுமொத்தமாக மேம்பாடு மற்றும் ஊழியர்களின் பணி அனுபவத்தை மேம்படுத்துதலில் கவனம் செலுத்தப்பட்டது. 15.10.2024 வரை 45,933 கோப்புகள் ஆய்வு செய்யப்பட்டு, 6,854 கோப்புகள் கழிக்கப்பட்டுள்ளன. கோப்புகளை கழித்து அகற்றியதன் மூலம் 12,702 சதுர அடி காலி இடமும், ரூ.17,93,152/- வருவாயும் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
எம்.பிரபாகரன்