மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் துறை அமைச்சர் திரு நிதின் கட்கரி ‘எக்ஸ்’ தளத்தில் வெளியிட்ட பதிவில், 28.9 கி.மீ, 4-வழி அணுகல்-கட்டுப்பாட்டு வடக்கு பாட்டியாலா புறவழிச்சாலை அமைப்பதற்கு ரூ .1,255.59 கோடிக்கு அமைச்சகம் ஒப்புதல் அளித்துள்ளதாக அறிவித்தார். இந்தத் திட்டம் நகரத்தில் போக்குவரத்து நெரிசலை கணிசமாகக் குறைப்பது, பிராந்திய இணைப்பை மேம்படுத்துவது மற்றும் பொருட்கள் மற்றும் தளவாடங்களின் சீரான போக்குவரத்தை உறுதி செய்வதை நோக்கமாகக் கொண்டுள்ளது. இந்த புறவழிச்சாலை பிராந்தியத்தின் உள்கட்டமைப்பு மற்றும் பொருளாதாரத்திற்கு பெரும் ஊக்கத்தை அளிக்கும்.
இதுகுறித்து திரு நிதின் கட்கரி, ‘எக்ஸ்’ பதிவில் கூறியிருப்பதாவது:
“பஞ்சாபில், 28.9 கி.மீ நீளமுள்ள 4-வழி அணுகல்-கட்டுப்பாட்டு வடக்கு பாட்டியாலா புறவழிச்சாலையை நிர்மாணிக்க ரூ .1255.59 கோடிக்கு ஒப்புதல் அளித்துள்ளோம். இந்தப் புதிய புறவழிச்சாலை பாட்டியாலாவைச் சுற்றியுள்ள வட்டச் சாலையை நிறைவு செய்து, நகரத்தில் போக்குவரத்து நெரிசலைக் கணிசமாகக் குறைக்கும். இந்தத் திட்டம் பிராந்திய இணைப்பை மேம்படுத்துவதோடு, பொருட்கள் மற்றும் தளவாடங்களின் சீரான இயக்கத்தை எளிதாக்கும், இது பகுதியின் உள்கட்டமைப்பு மற்றும் பொருளாதாரத்திற்கு பெரும் ஊக்கத்தை அளிக்கும்”.
எஸ்.சதிஸ் சர்மா