சர்வதேச அபிதம்மா தின கொண்டாட்டம் மற்றும் பாலி மொழி செம்மொழியாக அங்கீகரிக்கப்பட்டதற்கான விழாவில் பிரதமர் நரேந்திர மோதி உரை.

புதுதில்லி விஞ்ஞான் பவனில் இன்று நடைபெற்ற சர்வதேச அபிதம்மா தினக் கொண்டாட்டம் மற்றும் பாலி மொழி செம்மொழியாக அங்கீகரிக்கப்பட்டதற்கான விழாவில் பிரதமர் திரு நரேந்திர மோடி கலந்து கொண்டு உரையாற்றினார். புத்தபிரான்  அபிதம்மாவைப் போதித்து ஞானம் பெற்ற பிறகு, அவரது பாதையைப் பின்பற்றுவதை நினைவு கூர்வதே அபிதம்மா தினமாகும். அபிதம்மா குறித்த புத்தபிரானின் போதனைகளின்  மூலம்  பாலி மொழியில் தான் உள்ளது என்பதால், அண்மையில்,  பாலி மொழிக்கு  செம்மொழி அங்கீகாரம் அளிக்கப்பட்டது, இந்த ஆண்டின் அபிதம்மா கொண்டாட்டங்களின் முக்கியத்துவத்தை அதிகரித்துள்ளது.

நிகழ்ச்சியில் உரையாற்றிய பிரதமர், அபிதம்மா தினக் கொண்டாட்டத்தில் பங்கேற்க வாய்ப்புக் கிடைத்ததற்கு மகிழ்ச்சி தெரிவித்ததுடன், இந்த உலகை அமைதி மற்றும் கருணை மிகுந்த இடமாக மாற்ற வேண்டும் என்பதை இந்த நிகழ்ச்சி மக்களுக்கு நினைவூட்டுவதாக உள்ளது என்றும் குறிப்பிட்டார். கடந்த ஆண்டு குஷி நகரில் நடைபெற்ற இதே போன்ற விழாவில் பங்கேற்றதை நினைவு கூர்ந்த திரு மோடி, புத்தபிரான் தொடர்பான இடங்களை இணைக்கும் பயணம், அவரது பிறப்பிலிருந்து தொடங்கி இன்று வரை தொடர்வதாக கூறினார்.  தாம் குஜராத் மாநிலம் வத் நகரில் பிறந்ததை  நினைவு கூர்ந்த பிரதமர்,  இந்த நகரம்  புத்தமதம் தொடர்பான  முக்கிய இடமாக திகழ்ந்ததுடன், புத்தபிரானின் தம்மா மற்றும் அவரது போதனைகளை அறிந்து கொள்வதற்கான ஆர்வத்தை தூண்டியதாகவும் தெரிவித்தார். கடந்த பத்து ஆண்டுகளில் இந்தியாவிலும் உலகின் பிற பகுதிகளிலும் புத்தபிரான் தொடர்புடைய எண்ணற்ற நிகழ்ச்சிகளில் பங்கேற்கும் வாய்ப்பு தமக்குக் கிடைத்ததாகவும் பிரதமர் குறிப்பிட்டார். நேபாளத்தில் உள்ள புத்தபிரான் பிறந்த இடத்தை பார்வையிட்டிருப்பதுடன், மங்கோலியாவில் புத்தபிரானின் சிலையைத் திறந்து வைத்தது, இலங்கையின் பைஷாக் சமரோ சென்றது போன்றவற்றையும் நினைவு கூர்ந்தார். புத்தபிரானின் ஆசியால் தான் சங்க் மற்றும் சதக் ஆகியவை ஒன்றிணைந்ததாக நம்புவதாக கூறிய பிரதமர், இந்த நிகழ்ச்சியையொட்டி தமது நல்வாழ்த்துகளைத் தெரிவித்தார். சரத் பூர்ணிமா புனித தினம் மற்றும் மகரிஷி வால்மீகி முனிவரின் பிறந்த நாள் வருவதையும் அவர் சுட்டிக்காட்டினார்.  இந்நாளையொட்டி அவர் மக்கள் அனைவருக்கும் தமது நல்வாழ்த்துகளை தெரிவித்துக் கொண்டார். புத்தபிரான் சொற்பொழிவாற்றிய பாலி மொழிக்கு மத்திய அரசால் இந்த மாதம் செம்மொழி தகுதி வழங்கப்பட்டுள்ள நிலையில், இந்த ஆண்டின் அபிதம்மா தினம் கொண்டாடப்படுவது சிறப்புக்குரியது என்றும் பிரதமர் மகிழ்ச்சி தெரிவித்தார். எனவே, இன்றைய நிகழ்ச்சி மேலும் சிறப்புக்குரியது என்றும் அவர் குறிப்பிட்டார். பாலி மொழி செம்மொழியாக அங்கீகரிக்கப்பட்டதன் அந்த மொழிக்கு கௌரவம் அளிக்கப்பட்டிருப்பதாக கூறிய பிரதமர், இந்த நடவடிக்கை புத்தபிரானின் மரபு மற்றும் பாரம்பரியத்திற்கு செலுத்தும் மரியாதை என்றும் தெரிவித்தார். மேலும், தம்மாவில் அபிதம்மா அடங்கியிருப்பதை சுட்டிக்காட்டிய திரு மோடி, தம்மமாவின் உண்மையான அர்த்தத்தை உணர்வதற்கு பாலி மொழியை அறிந்திருப்பது அவசியம் என்றார். தம்மாவின் பல்வேறு அர்த்தங்களை விளக்கிக் கூறிய திரு மோடி, தம்மா என்பது செய்தி என்ற பொருள் படுவதோடு, புத்தபிரானின் கோட்பாடுகள் மனிதர்கள் உயிர் வாழ்வது தொடர்பான பல்வேறு கேள்விகளுக்கு பதில் அளிப்பதுடன், மனித இனத்திற்கு அமைதிக்கான வழியைக் காட்டுவதாகவும் புத்தரின் நித்திய போதனைகள் மற்றும்  ஒட்டுமொத்த மனித குல நலனுக்கு உறுதியான உத்தரவாதத்தை அளிப்பதாகவும் தெரிவித்தார்.  ஒட்டுமொத்த உலகமும் புத்தரின் தம்மத்தால், தொடர்ந்து ஞானம் பெற்று வருவதாகவும் அவர் கூறினார்.

புத்தபிரான் பேசிய பாலி மொழி, தற்போது பொது புழக்கத்தில் இல்லாமல் போனது துரதிருஷ்டவசமானது என்றும் பிரதமர் குறிப்பிட்டார். மொழியைப் புரிந்து கொள்வது என்பது தொடர்புக்கான ஒரு ஊடகமாக மட்டுமின்றி, கலாச்சாரம் மற்றும் பாரம்பரியத்தின் ஆன்மாவாக திகழ்வதாக கூறிய பிரதமர், இது அடிப்படை உணர்வுகளுடன் தொடர்புடையது என்பதுடன், தற்காலத்திலும் பாலி மொழியை உயிர்ப்புடன் வைத்திருக்க வேண்டியது அனைவரின் கூட்டுப் பொறுப்பு என்றும் தெரிவித்தார். இந்தப் பொறுப்பை தற்போதைய அரசு மிகுந்த அடக்கத்துடன் நிறைவேற்றியிருப்பது குறித்து மனநிறைவு தெரிவித்த அவர், இதன் மூலம் புத்தபிரானின் கோடிக்கணக்கான சீடர்களிடையே உரையாற்றும் வாய்ப்பை வழங்கியிருப்பதாகவும் தெரிவித்தார்.

Leave a Reply