நிலக்கரி சுரங்கங்களிலிருந்து நிலக்கரி வெட்டி எடுப்பதற்கான வர்த்தக ரீதியான 10-வது சுற்று ஏலத்திற்கு அமோக ஆதரவு கிடைத்துள்ளது. சுரங்கங்களை வெட்டுவதற்கான உரிமம் கோரி, நிலக்கரி அமைச்சகத்திற்கு மொத்தம் 44 ஏலக் கோரிக்கைகள் வரப்பெற்றுள்ளன. இந்த அளவுக்கு ஏலக் கோரிக்கைகள் வரப்பெற்றிருப்பது, இந்தியாவில் வேகமாக வளர்ந்து வரும் நிலக்கரித்துறையின் செயல்பாடுகளில் சம்பந்தப்பட்ட தரப்பினரின் ஆர்வம் மற்றும் பங்கேற்பு தொடர்ந்து அதிகரித்து வருவதை எடுத்துக் காட்டுவதாக உள்ளது.
67 நிலக்கரி சுரங்கங்களில் நிலக்கரி வெட்டி எடுப்பதற்கான 10-வது சுற்று ஏல நடைமுறைகளை நிலக்கரி அமைச்சகம் 2024 ஜூன் 21 அன்று தொடங்கியது. ஏலதாரர்கள், தங்களது ஏலம் கோரும் விண்ணப்பங்களை சமர்ப்பிப்பதற்கான காலஅவகாசம் இன்றுடன் (18.10.2024) முடிவடைந்தது. நேரடியாக சமர்ப்பிக்கப்பட்ட ஏலக் கோரிக்கைகளுடன், ஆன்லைன் வழியாக வரப்பெற்ற கோரிக்கைகளும், சம்பந்தப்பட்ட அலுவலகத்திற்கு அனுப்பப்பட்டு, ஏலதாரர்கள் முன்னிலையில், 2024 அக்டோபர் 21 அன்று இந்த விண்ணப்ப ங்கள் திறக்கப்பட உள்ளது.
நிலக்கரித் துறையில் திறன் மிகு மற்றும் போட்டிச் சூழலை மேம்படுத்தி, பொருளாதார வளர்ச்சித் திட்டங்களுக்குத் தேவைப்படும் நிலக்கரி கிடைப்பதை உறுதி செய்ய நிலக்கரி அமைச்சகம் உறுதி பூண்டுள்ளது.
எம்.பிரபாகரன்