இந்திய கடற்படையின் முதலாவது பயிற்சி அணி – ஐஎன்எஸ் திர் மற்றும் ஐசிஜிஎஸ் வீரா ஆகியவை பஹ்ரைன் நாட்டின் மனாமாவில் தங்களது நீண்ட தொலைவு பயிற்சியை 2024 அக்டோபர் 16 அன்று நிறைவு செய்தது. துறைமுக பங்கேற்பின் போது, இந்தியக் கடற்படை பயிற்சிப் பிரிவின் மூத்த அதிகாரி கேப்டன் அன்சுல் கிஷோர், பஹ்ரைன் நாட்டின் ராயல் கமாண்ட் அதிகாரி மேஜர் ஜெனரல் சல்மான் முபாரக் அல் – தொசேரி, கமோடர் அகமது இப்ராஹிம் புகமூத் ஆகியோரை சந்தித்துப் பேசினார். அப்போது பிராந்திய கடல்சார் பாதுகாப்பு சவால்கள், எதிர்கால பயிற்சி மற்றும் செயல்பாடுகளில் ஒத்துழைப்பதற்கான வாய்ப்புகள் குறித்து இருதரப்பினரும் விவாதித்தனர்.
பின்னர் கடற்படை பயிற்சி அணியினர், கடலோரக் காவல் படையின் ஐசிஜிஎஸ் வீரா அணியின் கமாண்டிங் அதிகாரியுடன் இணைந்து பஹ்ரைன் கடற்படை துணை கமாண்டர் கமோடர் மார்க் ஆண்டர்சனையும் சந்தித்து இருதரப்பு ஒத்துழைப்புகள் குறித்து ஆலோசனை நடத்தினர்.
திவாஹர்