கடந்த 10 ஆண்டுகளில் இழந்த மதிப்பை இளைஞர்கள் மீண்டும் பெற்றுள்ளனர்: மத்திய அமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங்.

கடந்த 10 ஆண்டுகளில், பிரதமர் திரு நரேந்திர மோடியின் தலைமையின் கீழ், இந்திய இளைஞர்கள் இழந்த மரியாதையை மீண்டும் பெற்றுள்ளனர் என்று மத்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறை இணை அமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங் தெரிவித்துள்ளார். இன்று, அவர்களின் திறமை மற்றும் ஆற்றல் உலகளவில் அங்கீகரிக்கப்படுகிறது என்று அவர் கூறியுள்ளார்.

திருவனந்தபுரத்தில் உள்ள இந்திய விளையாட்டு ஆணையத்தின் லட்சுமிபாய் தேசிய உடற்கல்வியியல் கல்லூரியில் (எல்.என்.சி.பி.இ) நேரு யுவ கேந்திரா சங்கதன் ஏற்பாடு செய்திருந்த ‘மனதின் குரல் வினாடி-வினா’ போட்டியின் நான்காவது பருவத்தை டாக்டர் ஜிதேந்திர சிங் தொடங்கி வைத்தார்.

நிகழ்ச்சியில் உரையாற்றிய டாக்டர் ஜிதேந்திர சிங், உள்நாட்டிலும், சர்வதேச அளவிலும் இந்திய இளைஞர்களின் குறிப்பிடத்தக்க சாதனைகளைப் பாராட்டினார். இந்த நிகழ்ச்சி மூன்று முக்கிய அம்சங்களைக் கொண்டதாகும்.

மூன்றாவது பருவத்தில், மனதின் குரல் வினாடி வினா போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு சான்றிதழ்களை வழங்கிய அமைச்சர், இந்திய விளையாட்டு ஆணையத்தின் சிறந்த சர்வதேச விளையாட்டு வீரர்களை கௌரவித்தார். நான்காவது பருவப் போட்டியில் வெற்றி பெறும் அணிக்கு தில்லியில் நடைபெறும் குடியரசு தின விழாவில் பங்கேற்கும் வாய்ப்பு அளிக்கப்படும்.

முன்னாள் வெளியுறவுத்துறை இணை அமைச்சர் திரு வி முரளீதரன் தலைமை உரையாற்றினார். இந்திய குடிமைப் பணியை மாற்றியமைக்க உதவிய பிரதமரின் தொலைநோக்குத் திட்டமான மிஷன் கர்மயோகியை அமல்படுத்துவதில் டாக்டர் ஜிதேந்திர சிங்கின் முக்கிய பங்கையும் திரு வி முரளீதரன் பாராட்டினார்.

Leave a Reply