2024 ஆகஸ்ட் மாதத்தில் மொத்தம் 18.53 லட்சம் உறுப்பினர்களை இபிஎஃப்ஓ இணைத்துள்ளது.

ஊழியர் வருங்கால வைப்பு நிதி அமைப்பு (இபிஎஃப்ஓ) ஆகஸ்ட் 2024-க்கான தற்காலிக ஊழியர் பதிவுத் தரவை வெளியிட்டுள்ளது. ஆகஸ்ட் 2024-ல் 18.53 லட்சம் உறுப்பினர்களின் மொத்த சேர்க்கையை இது வெளிப்படுத்துகிறது. இது ஆகஸ்ட் 2023 உடன் ஒப்பிடும்போது 9.07% வளர்ச்சியைக் காட்டுகிறது.

ஊழியர் வருங்கால வைப்பு நிதி அமைப்பு ஆகஸ்ட் 2024-ல் சுமார் 9.30 லட்சம் புதிய உறுப்பினர்களைச் சேர்த்துள்ளது. இது முந்தைய ஆண்டு (ஆகஸ்ட் 2023) புதிய உறுப்பினர்களின் எண்ணிக்கையை விட  0.48% அதிகமாகும். வளர்ந்து வரும் வேலை வாய்ப்புகள், ஊழியர்களுக்கு  நன்மைகள் பற்றிய விழிப்புணர்வு மற்றும் இபிஎஃப்ஓ-வின் வெற்றிகரமான மக்கள் தொடர்பு திட்டங்கள் ​​ஆகியவை புதிய உறுப்பினர்களின் அதிகரிப்புக்கு, காரணமாக இருக்கலாம்.

2024 ஆகஸ்டில் சேர்க்கப்பட்ட மொத்த புதிய உறுப்பினர்களில்  59.26% ஆக18-25 வயதுப் பிரிவினர் இருப்பது   குறிப்பிடத்தக்க அம்சமாகும். ஏறக்குறைய 13.54 லட்சம் உறுப்பினர்கள் வேலையிலிருந்து வெளியேறி,  மீண்டும் இபிஎஃப்ஓ-ல் இணைந்துள்ளனர் என்பதை ஊதியத் தரவு எடுத்துக்காட்டுகிறது. இந்த எண்ணிக்கை ஆகஸ்ட் 2023 உடன் ஒப்பிடும்போது 14.03% வளர்ச்சியைக் காட்டுகிறது.

ஊதியத் தரவுகளின் பாலின வாரியான பகுப்பாய்வு, ஆகஸ்ட் மாதத்தில் சேர்க்கப்பட்ட புதிய உறுப்பினர்களில், சுமார் 2.53 லட்சம் பேர் பெண் உறுப்பினர்கள் என்பதைக் காட்டுகிறது. ஆகஸ்ட் 2023 உடன் ஒப்பிடும்போது இந்த எண்ணிக்கை 3.75% வளர்ச்சியை வெளிப்படுத்துகிறது. மேலும், இந்த மாதத்தில் மொத்தம்  பெண் உறுப்பினர் சேர்த்தல் 3.79 லட்சமாக இருந்தது. இது ஆகஸ்ட் 2023 உடன் ஒப்பிடும்போது, ​​10.41% வளர்ச்சியைப் பிரதிபலிக்கிறது.

மாநில வாரியான ஊதியத் தரவுகளின் பகுப்பாய்வு, முதல் ஐந்து மாநிலங்கள்/ யூனியன் பிரதேசங்களில் மொத்த உறுப்பினர் சேர்க்கையில் சுமார் 59.17% ஆகும். இந்த மாதத்தில் மொத்தம் 20.59% நிகர உறுப்பினர்களைச் சேர்த்து மகாராஷ்டிரா முன்னிலையில் உள்ளது. மகாராஷ்டிரா, கர்நாடகா, தமிழ்நாடு, ஹரியானா, தில்லி, குஜராத், தெலங்கானா, உத்தரப் பிரதேசம் ஆகிய மாநிலங்கள்/யூனியன் பிரதேசங்கள் இந்த மாதத்தில் மொத்த  உறுப்பினர்களில் 5%க்கும் அதிகமான உறுப்பினர்களைச் சேர்த்துள்ளன.

Leave a Reply