உத்தரப்பிரதேச மாநிலம் வாரணாசியில் ஆர்ஜே சங்கரா கண் மருத்துவமனையைப் பிரதமர் நரேந்திர மோதி திறந்து வைத்தார்.

உத்தரப்பிரதேச மாநிலம் வாரணாசியில் ஆர்ஜே சங்கரா கண் மருத்துவமனையைப் பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று திறந்து வைத்தார். இந்த மருத்துவமனை பல்வேறு கண் நோய்களுக்கு  விரிவான ஆலோசனைகள் மற்றும் சிகிச்சைகளை வழங்கும். விழாவில் வைக்கப்பட்டிருந்த கண்காட்சியைத் திரு மோடி பார்வையிட்டார்.

இந்நிகழ்ச்சியில் உரையாற்றிய பிரதமர், இந்த புனிதமான காலத்தில் காசிக்கு செல்வது நல்லொழுக்கத்தை அனுபவிப்பதற்கான வாய்ப்பாகும் என்றார். காசி மக்கள், துறவிகள், கொடையாளர்கள் கருணையுடன் இருப்பதையும் பரம பூஜ்ய சங்கராச்சாரியாரை  தரிசனம் செய்து பிரசாதம் மற்றும் ஆசீர்வாதங்களைப் பெறுவதையும் அவர் குறிப்பிட்டார். காசியும்  உத்தராஞ்சலும் இன்று மற்றொரு நவீன மருத்துவமனையுடன் ஆசீர்வதிக்கப்பட்டுள்ளது என்பதை சுட்டிக்காட்டிய பிரதமர், சங்கரரின் தேசத்தில் ஆர்.ஜே. சங்கரா கண் மருத்துவமனை அர்ப்பணிக்கப்பட்டது பற்றி  குறிப்பிட்டார். இந்த விழாவில் காசி மற்றும் உத்தராஞ்சல் மக்களுக்கு திரு மோடி வாழ்த்து தெரிவித்தார்.

இந்தியாவின் பண்டைய வேதங்களில் குறிப்பிடப்பட்டுள்ள மேற்கோள் ஒன்றினை எடுத்துரைத்த  பிரதமர், ஆர்ஜே சங்கரா கண் மருத்துவமனை இருளைத் துடைத்து, பலரை ஒளியை நோக்கி அழைத்துச் செல்லும் என்று கூறினார். கண் மருத்துவமனைக்குச் சென்றபோது, இது ஆன்மீகம் மற்றும் நவீனத்துவத்தின் கலவையாக இருப்பதை உணர்ந்ததாகவும், வயதானவர்கள் மற்றும் இளைஞர்களுக்கு கண்பார்வை வழங்குவதில் மருத்துவமனை சேவை செய்யும் என்றும் திரு மோடி கூறினார். ஏழைகள் அதிக அளவில் மருத்துவமனையில் இலவச சிகிச்சை பெறுவார்கள் என்றும் அவர் கூறினார். இந்த கண் மருத்துவமனை பல இளைஞர்களுக்கு புதிய வேலை வாய்ப்புகளையும், மருத்துவ மாணவர்களுக்கான வேலை மற்றும் உள்ளகப் பயிற்சி வாய்ப்புகளையும் உதவி ஊழியர்களுக்கான வேலைகளையும் உருவாக்கும் என்று திரு மோடி குறிப்பிட்டார்.

Leave a Reply