பணியாளர், பொதுமக்கள் குறைதீர்ப்பு மற்றும் ஓய்வூதிய அமைச்சகத்தின் கர்மயோகி வாரத்தின் போது கர்மயோகி வார குழு விவாதத்தில் மத்திய அமைச்சர் ஜிதேந்திர சிங் உரையாற்றினார்.

மத்திய பணியாளர், பொதுமக்கள் குறைகள் மற்றும் ஓய்வூதியங்கள் துறை இணையமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங், கர்மயோகி இயக்கம் குறித்து விளக்கினார்.

கர்மயோகி இயக்கம் “விதி” என்பதிலிருந்து “பங்கு” என்ற நிலைக்கு மாறியுள்ளதை அடிக்கோடிட்டுக் காட்டுகிறது என்று வலியுறுத்திய அமைச்சர், குடிமைப் பணியாளர்கள் விதிகளுக்குக் கட்டுப்பட்டவர்களாக இருக்கக் கூடாது, பொறுப்புகளுக்கு கட்டுப்பட்டவர்களாக இருக்க வேண்டும் என்பதில் கவனம் செலுத்த வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.

பணியாளர், பொதுமக்கள் குறைதீர்ப்பு மற்றும் ஓய்வூதிய அமைச்சகம் எவ்வாறு இந்த வழக்கமான கற்றல் சுழற்சியைத் தொடங்கிய அமைச்சகங்களில் முதலாவதாக உள்ளது என்பதை மத்திய அமைச்சர் கோடிட்டுக் காட்டினார். இந்த நிகழ்ச்சியின் போது, பிரதமர் திரு. நரேந்திர மோடியிடமிருந்து உத்வேகம் பெற்ற பிறகு மிஷன் கர்மயோகி அமைப்பதற்கான பயணத்தையும் அமைச்சர் நினைவு கூர்ந்தார். இந்தப் பணியை மேற்கொண்டதற்காக திறன் மேம்பாட்டு ஆணையத்தையும் அவர் பாராட்டினார்.

கர்மயோகி இயக்கம் ஆளுமையில் ஒரு புதிய கலாச்சாரத்தை உருவாக்க வழிவகுத்துள்ளது என்று மத்திய அமைச்சர் கூறினார்.  பல்வேறு அமைச்சகங்களில் அரசின் பல்வேறு பணிகளைச் செய்வதில் அதிகாரிகளுக்கு மிஷன் கர்மயோகி உதவும் என்று அவர் கூறினார்.

வளர்ச்சியடைந்த பாரதம் கனவை நனவாக்க ‘ஒரே அரசு’ அணுகுமுறையுடன் நிலையான சுற்றுச்சூழல் அமைப்பின் அடுக்கை மிஷன் கர்மயோகி எவ்வாறு உருவாக்குகிறது என்பதை மத்திய அமைச்சர் எடுத்துரைத்தார். மாறிவரும் காலத்தின் தேவைகளைக் கருத்தில் கொண்டு, ஒருவர் தொடர்ந்து கற்றல் செயல்முறைகளில் ஈடுபட வேண்டும் என்றும் அவர்  கேட்டுக்கொண்டார். வளர்ச்சியடைந்த பாரதம் 2047 -ல் முன்னணியில் இருக்கும் அதிகாரிகளுக்கு இது மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கும்.

குழு விவாதத்தின் இந்த சிந்தனை அமர்வு, தொழில்கள், துறை மற்றும் ஒட்டுமொத்த அரசு ஆகியவற்றுடன் ஒருங்கிணைந்த, பரந்த கட்டமைப்பை, பரந்த சுற்றுச்சூழல் அமைப்பை உருவாக்க உதவும் என்று அவர் குறிப்பிட்டார்.

மேலும், பணியாளர், பொதுமக்கள் குறைகள் மற்றும் ஓய்வூதிய அமைச்சகத்தின் அதிகாரிகளுக்கான குழு விவாதத்தின் நோக்கம், அமைச்சகத்திற்குள் உள்ள துறைகளைச் சேர்ந்த அதிகாரிகளை ஒன்றிணைப்பதன் மூலம் தேர்ந்தெடுக்கப்பட்ட கருப்பொருளில் கற்றலை எளிதாக்குவதும் பலப்படுத்துவதும் ஆகும். ‘தேசிய கற்றல் வாரம்’ திட்டத்தின் ஒரு பகுதியான ஒரு பயிலரங்கிலிருந்து பெறப்பட்ட தேர்ந்தெடுக்கப்பட்ட கருப்பொருளில் அதிகாரிகள் சிந்திக்கவும் கருத்துக்களைப் பரிமாறிக் கொள்ளவும் உதவும் வகையில் குழு விவாதம் வடிவமைக்கப்பட்டுள்ளது.

Leave a Reply