உடான் திட்டத்தின் புகழ்மிக்க 8 ஆண்டுகளைக் குறிக்கும் கொண்டாட்டத்தில் ராம் மோகன் நாயுடு பங்கேற்றார்.

உடான் திட்டத்தின் வெற்றிகரமான 8 ஆண்டுகளைக் கொண்டாடும் இன்றைய சிறப்பு நிகழ்ச்சியில் சிவில் விமான போக்குவரத்துத் துறை அமைச்சர் திரு ராம் மோகன் நாயுடு, துறையின் செயலாளர் மற்றும் மூத்த அதிகாரிகளுடன் கலந்து கொண்டார். தொலைதூர மற்றும் பிராந்திய இணைப்பை முன்னேற்றுவதில் இந்தத் திட்டம் குறிப்பிடத்தக்க மைல்கற்களை எட்டியுள்ளது.

இந்தியாவின் தொலைதூரப் பகுதிகளை உலகளாவிய இடங்களுடன்  இணைக்கும் விமானப் பயணத்தில் உடான் புரட்சியை ஏற்படுத்தியுள்ளது என்று அமைச்சர் தனது உரையில் கூறினார். இத்திட்டத்தின் கீழ், 86 விமான நிலையங்களிலிருந்து   601 வழித்தடங்களில் விமானங்கள் இயக்கப்பட்டு, இதுவரை 1கோடியே 44 லட்சம்  பயணிகள் பயனடைந்துள்ளனர்என்று அவர் குறிப்பிட்டார்.

முதலாவது உடான் விமானத் திட்டத்தை பிரதமர் திரு நரேந்திர மோடி 2017, ஏப்ரல் 27 அன்று தொடங்கி வைத்தார். இந்த விமானம்  சிம்லாவிலிருந்து தில்லியை இணைத்தது. இத்திட்டமானது நாட்டின் பின்தங்கிய பகுதிகளில் சேவை செய்யப்படாத விமானப் பாதைகளை மேம்படுத்துவதிலும், சாதாரண குடிமக்களின் விருப்பங்களை நிறைவேற்றுவதிலும் கவனம் செலுத்துகிறது.

விமானங்களுக்கான அதிகபட்ச தேவை இந்தியாவுக்கான விமான ஆர்டர்களால் நிரூபிக்கப்பட்டுள்ளது.  அடுத்த 10-15 ஆண்டுகளில் வழங்குவதற்கான ஆர்டர்கள் 1,000 விமானங்களைத் தாண்டியுள்ளது. இந்தியாவில் தற்போது பல்வேறு விமான நிறுவனங்களால் சுமார் 800 விமானங்கள் இயக்கப்படுகின்றன. 

முந்த்ரா (குஜராத்) முதல் அருணாச்சலப் பிரதேசத்தின் தேசு மற்றும் இமாச்சலப் பிரதேசத்தின் குலு வரை தமிழ்நாட்டின் சேலம் வரை என உடான் நாடு முழுவதும் 34 மாநிலங்கள்/யூனியன் பிரதேசங்களை இணைத்துள்ளது. உடானின் கீழ் மொத்தம் 86 விமான நிலையங்கள் செயல்படுத்தப்படுகின்றன. இரண்டு ஹெலிகாப்டர் தளங்களுடன் கூடுதலாக பத்து விமான நிலையங்கள் வடகிழக்கு பிராந்தியத்தில் செயல்படுத்தப்பட்டுள்ளன. தர்பங்கா, பிரயாக்ராஜ், ஹூப்ளி, பெல்காம், கண்ணூர் போன்ற உடான் திட்டத்தின் கீழ் செயல்படும் பல விமான நிலையங்கள், இவற்றிலிருந்து இயக்கப்படும் பல பிராந்திய இணைப்புத் திட்டம்  அல்லாத வணிக விமானங்கள் மூலம் நிலையானதாக இருக்கலாம் அல்லது விரைவில் நிலைபெறலாம்.

Leave a Reply