மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் துறை அமைச்சர் திரு நிதின் கட்கரி 21.10.2024 அன்று நாகாலாந்து துணை முதலமைச்சர் திரு டி.ஆர்.ஜெலியாங் சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை இணையமைச்சர்கள் திரு அஜய் தம்தா, திரு ஹர்ஷ் மல்ஹோத்ரா ஆகியோர் முன்னிலையில் நாகாலாந்தின் தேசிய நெடுஞ்சாலைகளை ஆய்வு செய்தார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:
“மத்திய இணையமைச்சர்கள் திரு அஜய் தம்தா, திரு எச் டி மல்ஹோத்ரா, நாகாலாந்து துணை முதல்வர் திரு டி.ஆர் ஜெலியாங் மற்றும் தில்லியில் உள்ள மூத்த அதிகாரிகளுடன் நாகாலாந்தில் 545 கி.மீ தூரத்தை உள்ளடக்கிய 29 தேசிய நெடுஞ்சாலை திட்டங்களின் முன்னேற்றம் குறித்து ஆய்வு செய்தேன். கூட்டத்தின் போது, நாகாலாந்தில் போக்குவரத்து உள்கட்டமைப்பு வளர்ச்சியை விரைவுபடுத்த வேண்டியதன் அவசியத்தை நாங்கள் வலியுறுத்தினோம், நிலைத்தன்மை மற்றும் செலவு திறன் ஆகியவற்றுக்கு முன்னுரிமை அளிக்கிறோம். இந்த முயற்சிகள் இணைப்பை பெரிதும் மேம்படுத்தும், உள்ளூர் பொருளாதார வளர்ச்சியை ஊக்குவிக்கும், மேலும் இந்தியாவின் ஒட்டுமொத்த வளர்ச்சியில் பிராந்தியத்தின் ஆழமான ஒருங்கிணைப்புக்கு பங்களிக்கும்.
பிரதமர் திரு நரேந்திர மோடியின் தொலைநோக்குப் பார்வையால் உந்தப்பட்டுநாகாலாந்தின் நெடுஞ்சாலைகள் வளர்ச்சியின் உயிர்நாடிகளாக மாறி வருகின்றன. இணைப்பு, செழிப்பு மற்றும் முன்னேற்றத்தின் எதிர்காலம் ஒவ்வொரு புதிய சாலையிலும் வெளிப்படுகிறது.”
21.10.2024 அன்று புதுதில்லியில் மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் துறை அமைச்சர் திரு நிதின் கட்கரி நான்கு வடகிழக்கு மாநிலங்களின் தேசிய நெடுஞ்சாலைகளை ஆய்வு செய்தார்.
திவாஹர்