தூய்மையை மேம்படுத்தவும், நிலுவைப் பணிகளைக் குறைக்கவும் கனரக தொழில்கள் அமைச்சகம் சிறப்பு இயக்கம் 4.0 ஐ மேற்கொண்டது.

தூய்மையை நடைமுறைப்படுத்தும் மற்றும் பணியிட செயல்திறனை மேம்படுத்துதல் என்ற பிரதமர் திரு நரேந்திர மோடியின் தொலைநோக்குப் பார்வையிலிருந்து உத்வேகம் பெற்று, கனரகத் தொழில்கள் அமைச்சகம், அதன் மத்திய பொதுத்துறை நிறுவனங்கள் மற்றும் தன்னாட்சி அமைப்புகளுடன் இணைந்து சிறப்பு இயக்கம் 4.0-ன் முக்கிய கட்டத்தில் தீவிரமாக பங்கேற்கிறது. 2024 அக்டோபர் 2 அன்று  தொடங்கி  அக்டோபர் 31 வரை தொடரும் இந்த இயக்கம் நாடு முழுவதும் பொதுத்துறை பணியிடங்களில் பயனுள்ள முன்னேற்றங்களை ஏற்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.

மத்திய கனரகத் தொழில்கள் மற்றும் எஃகுத் துறை அமைச்சர் திரு எச்.டி.குமாரசாமி, பெங்களூருவில் உள்ள எச்.எம்.டி வளாகத்தில் தொழிலாளர்களுடன் தூய்மை இயக்கத்தில் தீவிரமாகப் பங்கேற்றார். தூய்மை இந்தியா குறித்த பிரதமர் திரு நரேந்திர மோடியின் தொலைநோக்குப் பார்வையை வலியுறுத்திய அவர், எதிர்கால சந்ததியினருக்காக “தூய்மை, அழகு மற்றும் திறமை கொண்ட பாரதம்” என்பதை நோக்கி தொடர்ந்து முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும் என்று அழைப்பு விடுத்தார்.

சிறப்பு இயக்கங்களில் குறிப்பிடத்தக்க சாதனைகள் 4.0

தொடர்ச்சியான முயற்சிகளின் விளைவாக, இயக்கம் ஏற்கனவே கணிசமான மைல்கற்களை அடைந்துள்ளது:

* 12.53 லட்சம் சதுர அடி பரப்பளவு காலியாக்கப்பட்டுள்ளது.

* 24,997 நேரடி கோப்புகள் மதிப்பாய்வு செய்யப்பட்டுள்ளன, 7,428 கோப்புகள் அகற்றப்பட்டுள்ளன, மேலும் 3801-க்கும் மேற்பட்ட டிஜிட்டல் கோப்புகள் நிறைவு செய்யப்பட்டுள்ளன.

* கழிக்கப்பட்ட பொருட்களை அகற்றியதன் மூலம் ரூ.1.59 கோடி வருவாய் கிடைத்துள்ளது.

சமூக ஊடகங்களில், சிறப்பு இயக்கம் 4.0-ன் கீழ், முக்கிய நடவடிக்கைகள் மற்றும் சாதனைகளை எடுத்துரைக்கும் 402-க்கும் மேற்பட்ட பதிவுகள் எக்ஸ் தளத்தில் பகிரப்பட்டுள்ளன.

Leave a Reply