ஐடியு கலைடாஸ்கோப்-2024 நிகழ்வு நிறைவடைந்தது.

சர்வதேச தொழில்நுட்ப ஒன்றியம் – உலக தொலைத் தொடர்பு தரப்படுத்துதல் பேரவை 2024-ல் நடைபெற்ற மூன்று நாள் ஐடியு  கலைடாஸ்கோப்-2024 டிஜிட்டல் பிளவைக் குறைப்பதை மையமாகக் கொண்டதாகும். மேலும் வளர்ந்து வரும் தொழில்நுட்பங்கள் பின்தங்கிய மக்களை எவ்வாறு இணைக்க முடியும் என்பதையும் இது ஆராய்ந்தது. இந்த நாளில் தரப்படுத்தலில் இளைஞர்களின் பங்கு குறித்த கவனத்தை ஈர்க்கக்கூடிய விவாதங்களும் இதில் இடம்பெற்றன. மாணவர்களும் இளம் தொழில் வல்லுநர்களும் உலகளாவிய தரப்படுத்துதல் முயற்சிகளில் அடுத்த தலைமுறையை எவ்வாறு ஈடுபடுத்துவது என்பது குறித்த தங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொண்டனர்.

மத்திய அரசின் தொலைத்தொடர்புத் துறையின் டிஜிட்டல் கம்யூனிகேஷன்ஸ் ஆணையத்தின் உறுப்பினர் (சேவைகள்) திரு ரோஹித் சர்மா, “குவாண்டம் கம்ப்யூட்டிங் அச்சுறுத்தல்கள் மற்றும் அதன் தரப்படுத்துதல் போக்கு: குவாண்டம்  விநியோகம் மற்றும் பிந்தைய குவாண்டம் கிரிப்டோகிராஃபி” என்ற அமர்வுக்கு தலைமை தாங்கினார். ஐடியு தொலைத் தொடர்பு ஆய்வுக் குழு 17-ன் தலைவர் பேராசிரியர் ஹெங் யூல் யூமின், குவாண்டம் கம்ப்யூட்டிங்கால் முன்வைக்கப்படும் சைபர் பாதுகாப்பில் உள்ள சவால்களை எடுத்துரைத்து, பிந்தைய குவாண்டம் கிரிப்டோகிராஃபியில் தரப்படுத்தலின் அவசியத்தை வலியுறுத்தினார்.

தொலைத்தொடர்புத் துறையின் உறுப்பினர் (சேவைகள்) திரு ரோஹித் சர்மா தமது தொடக்க உரையில், “டிஜிட்டல் யுகத்தின் சவால்களை நாம் வழிநடத்தும்போது, குவாண்டம் கம்ப்யூட்டிங்கின் தோற்றம் மகத்தான வாய்ப்புகள் மற்றும் குறிப்பிடத்தக்க அபாயங்கள் இரண்டையும் வழங்குகிறது. இந்த தொழில்நுட்பம் கிரிப்டோகிராஃபி மற்றும் பாதுகாப்பான தகவல்தொடர்பு போன்ற துறைகளில் புரட்சியை ஏற்படுத்தும் திறனைக் கொண்டிருந்தாலும், இது உலகளாவிய அளவில் கவனிக்கப்பட வேண்டிய புதிய சவால்களையும் முன்வைக்கிறது என்று கூறினார். சர்வதேச சமூகத்துடனான ஒத்துழைப்பு நமது தொலைத் தொடர்பு அமைப்புகளை எதிர்காலத்தில் நிரூபிக்கும் என  அவர் மேலும் தெரிவித்தார்.

Leave a Reply