சாலை உள்கட்டமைப்பை மேம்படுத்தவும், பொருளாதார வளர்ச்சியை ஊக்குவிக்கவும் மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் திரு நிதின் கட்கரி இரண்டு முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டுள்ளார்.
“ஆந்திராவில், ஸ்ரீகாகுளம், ரணஸ்தலத்தில் 6 வழி உயர்த்தப்பட்ட நடைபாதையை மேம்படுத்துவதற்கும் நாங்கள் ரூ. 252.42 கோடி அனுமதித்துள்ளோம். இந்தத் திட்டம் போக்குவரத்து நெரிசலைக் குறைப்பதற்கும் சாலைப் பாதுகாப்பை மேம்படுத்துவதற்கும்நகர்ப்புற இயக்கத்தை மேம்படுத்துவதற்கும் கருவியாக இருக்கும். அதே நேரத்தில் புதிய சமூகப் பொருளாதார வாய்ப்புகளையும் உருவாக்கும். நெரிசலைக் குறைப்பதைத் தாண்டி, இந்த முயற்சி பொருளாதார நடவடிக்கைகளைத் தூண்டும். இதன் மூலம் பிராந்திய மக்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்த உதவும்” என்று அமைச்சர் சமூக ஊடகத் தளத்தில் பதிவிட்டுள்ளார்.
மத்திய பிரதேசத்தில் உள்ள தேசிய நெடுஞ்சாலை -146-ன் கியாராஸ்பூர் முதல் ரஹத்கர் வரையிலான பிரிவை ரூ.903.44 கோடி பட்ஜெட் ஒதுக்கீட்டுடன் மேம்படுத்துவதற்கும் ஒப்புதல் அளித்திருப்பதாகவும் திரு கட்கரி அறிவித்தார். போபால்-கான்பூர் வழித்தடத்தின் ஒரு பகுதியாக, இந்தத் திட்டம் பிராந்திய வர்த்தகம் மற்றும் வர்த்தகத்தை வலுப்படுத்தி, இணைப்பை அதிகரித்து, பொருளாதார நடவடிக்கைகளை ஊக்குவிப்பதன் மூலம் ஒட்டுமொத்த வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்தும்.
இந்த முயற்சிகள் சாலை உள்கட்டமைப்பை மேம்படுத்துதல், இணைப்பை மேம்படுத்துதல் மற்றும் பிராந்தியங்களில் பொருளாதார வளர்ச்சியை ஊக்குவித்தல் ஆகியவற்றிற்கான அரசின் உறுதிப்பாட்டைப் பிரதிபலிக்கின்றன.
எஸ்.சதிஸ் சர்மா