கர்மயோகி சப்தா / தேசிய கற்றல் வாரத்தின் போது, தேசிய மறைமுக வரிகள் மற்றும் சுங்க வாரியத்தின் (சிபிஐசி) தலைவர் திரு ரவி அகர்வால், நாடு தழுவிய நடத்தை உணர்திறன் திட்டத்தை தொடங்கி வைத்தார். சிபிஐசியின் அனைத்து 32 மண்டலங்களிலும் 52 தொகுதிகளுடன் இந்த முயற்சி தொடங்கப்பட்டுள்ளது.
இந்தக் குறிப்பிடத்தக்க முயற்சி நடத்தை உணர்திறன் பயிற்சி திட்டத்தின் மூலம் அதன் பணியாளர்களின் திறன்களை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. ஆய்வாளர்கள், கண்காணிப்பாளர்கள், உதவி ஆணையர்கள் மற்றும் துணை ஆணையர்கள் உட்பட பல்வேறு மட்டங்களில் சுமார் 35,000 அதிகாரிகளுக்கு பயிற்சி அளிக்க இந்தத் திட்டம் வடிவமைக்கப்பட்டுள்ளது.
கூடுதலாக, இந்த முயற்சியை வெற்றிகரமாக செயல்படுத்துவதற்கு அனைத்து மண்டலங்களின் ஈடுபாடும் முக்கியமானதாக இருக்கும். நடத்தை திறன்கள் மற்றும் உணர்திறன் ஆகியவற்றில் கவனம் செலுத்துவதன் மூலம், இந்தத் திட்டம் நிர்வாகத்திற்கு மிகவும் பலனளிக்கும்.
திவாஹர்