கர்நாடக மாநிலத்தின் ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கு 2024-25-ம் நிதியாண்டில் பதினைந்தாவது நிதிக்குழு மானியத்தை மத்திய அரசு விடுவித்துள்ளது. முதல் தவணையாக ரூ.448.29 கோடி மதிப்பிலான நிபந்தனையற்ற மானியம் விடுவிக்கப்பட்டுள்ளது. இந்த நிதி மாநிலத்தின் தகுதியான 5949 கிராம பஞ்சாயத்துகளுக்கும் பொருந்தும்.
மத்திய அரசு, பஞ்சாயத்து ராஜ் அமைச்சகம் மற்றும் ஜல் சக்தி அமைச்சகம் (குடிநீர் மற்றும் துப்புரவு துறை) மூலம், ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்காக மாநிலங்களுக்கு 15-வது நிதிக்குழு மானியத்தை விடுவிக்க பரிந்துரை செய்கிறது. ஒதுக்கீடு செய்யப்பட்ட மானியங்கள் பரிந்துரைக்கப்பட்டு ஒரு நிதியாண்டில் 2 தவணைகளில் விடுவிக்கப்படுகின்றன.
சம்பளம் மற்றும் பிற நிர்வாக செலவுகள் தவிர, அரசியலமைப்பின் பதினோராவது அட்டவணையில் குறிப்பிடப்பட்டுள்ள இருபத்தி ஒன்பது (29) இனங்களின் கீழ் ஊரக உள்ளாட்சி அமைப்புகளால் வரையறுக்கப்படாத மானியங்கள் இடம்சார்ந்த உணரப்பட்ட தேவைகளுக்கு பயன்படுத்தப்படும். பிணைக்கப்பட்ட மானியங்கள் (அ) சுகாதாரம் மற்றும் திறந்தவெளி கழிப்பிடம் இல்லாத நிலையைப் பராமரித்தல், இதில் வீட்டுக் கழிவுகளின் மேலாண்மை மற்றும் சுத்திகரிப்பு, குறிப்பாக மனித கழிவுகள் மற்றும் மலக் கசடு மேலாண்மை, (ஆ) குடிநீர் வழங்குதல், மழைநீர் சேகரிப்பு மற்றும் நீர் மறுசுழற்சி ஆகியவை அடங்கும்.
பஞ்சாயத்து ராஜ் அமைப்புகள் / ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கு பதினைந்தாவது நிதிக்குழு மானியங்களை வழங்குவதன் மூலம் ஊரக தன்னாட்சியை வலுப்படுத்த மத்திய அரசு வலுவான நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இந்த நிதி உள்ளூர் நிர்வாக அமைப்புகளை மிகவும் பயனுள்ள, பொறுப்பான மற்றும் சுதந்திரமானதாக மாற்ற உதவுகிறது. இது கிராமப்புறங்களில் நிலையான மற்றும் நீடித்த முன்னேற்றத்திற்கு வழிவகுக்கிறது.
எஸ்.சதிஸ் சர்மா