ஆறாவது ஏவுகணை மற்றும் வெடிமருந்து படகு (பார்ஜ்) , எல்எஸ்ஏஎம் 12 (யார்டு 80) இன் அறிமுக விழா நவம்பர் 22 அன்று மும்பை கடற்படை கப்பல்துறை தளத்தில் நடைபெற்றது. இந்த விழாவிற்கு மேற்கு கடற்படை தலைமையகத்தின் கமாண்ட் ரிஃபிட் அதிகாரி அபிரூப் மஜும்தார் தலைமை தாங்கினார்.
விசாகபட்டினம் சிகான் இன்ஜினியரிங் ப்ராஜெக்ட்ஸ் நிறுவனத்துடன் எட்டு எம்சிஏ பார்ஜ்களை ( படகுகள்) நிர்மாணிப்பதற்கான ஒப்பந்தம் பிப்ரவரி 19 அன்று கையெழுத்திடப்பட்டது. இந்திய கப்பல் வடிவமைப்பு நிறுவனத்துடன் இணைந்து இந்தக் கப்பல் கட்டும் தளம் உள்நாட்டிலேயே இந்தப் படகுகளை வடிவமைத்து, கடல்வழியை உறுதி செய்வதற்காக விசாகப்பட்டினத்தில் உள்ள கடற்படை அறிவியல் மற்றும் தொழில்நுட்ப ஆய்வகத்தில் வெற்றிகரமாக மாதிரி சோதனை செய்யப்பட்டது. இந்த படகுகள், கடற்படை விதிகள் மற்றும் இந்திய கப்பல் பதிவேட்டின் விதிமுறைகளின்படி கட்டப்பட்டுள்ளன. இந்த படகுகள் இந்திய அரசின் ‘மேக் இன் இந்தியா’ மற்றும் ‘தற்சார்பு இந்தியா ’ முன்முயற்சிகளுக்கு பெருமை சேர்த்துள்ளன.
இந்தப் படகுகளின் தூண்டல், ஜெட்டிகள் மற்றும் வெளி துறைமுகங்களில் உள்ள பிளாட்ஃபார்ம்களுக்கு போக்குவரத்து, ஏற்றுதல் மற்றும் பொருட்கள் / வெடிமருந்துகளை இறக்குதல் ஆகியவற்றை எளிதாக்குவதன் மூலம் செயல்பாட்டுக் கடமைகளுக்கு ஊக்கமளிக்கும்.
திவாஹர்