ஆசியான்-இந்தியா வர்த்தக ஒப்பந்த கூட்டுக் குழுவின் 6-வது கூட்டம் புதுதில்லியில் நடைபெற்றது.

6-வது ஆசியான்-இந்தியா சரக்கு வர்த்தக ஒப்பந்தக் கூட்டுக் குழு மற்றும்  மறுஆய்வு குறித்த விவாதங்களுக்கான தொடர்புடைய கூட்டங்கள் நவம்பர் 15 முதல்  22  வரை புது தில்லி வணிஜ்ய பவனில் நடைபெற்றன. 21, 22 ஆகிய இரண்டு நாட்கள் நடைபெற்ற  கூட்டுக் குழு கூட்டத்திற்கு இந்திய வர்த்தகத் துறை கூடுதல் செயலாளர் திரு ராஜேஷ் அகர்வால், மலேசிய நாட்டின் முதலீடு, வர்த்தகம், தொழில் அமைச்சகத்தின்  திருமதி. மஸ்துரா அஹ்மத் முஸ்தபா கியோர் தலைமை தாங்கினர்.  புருனே, கம்போடியா, இந்தோனேசியா, லாவோஸ், மலேசியா, மியான்மர், பிலிப்பைன்ஸ், சிங்கப்பூர், தாய்லாந்து, வியட்நாம் ஆகிய அனைத்து 10 ஆசியான் நாடுகளின் முன்னணி மற்றும் பிரதிநிதிகள் கூட்டத்தில் பங்கேற்றனர்.

சந்தை அணுகல், தோற்ற விதிகள்,  தரநிலைகள் மற்றும் தொழில்நுட்ப விதிமுறைகள், சுங்க நடைமுறைகள், பொருளாதார மற்றும் தொழில்நுட்ப ஒத்துழைப்பு, வர்த்தக தீர்வுகள் மற்றும் சட்ட மற்றும் நிறுவன விதிகள் தொடர்பான அம்சங்கள் குறித்து  பேச்சுவார்த்தை நடத்த கூட்டுக் குழுவின் கீழ் 8 துணைக் குழுக்கள் உள்ளன. இந்தப் பேச்சுவார்த்தையின் போது 8 துணைக்குழுக்களும் கூடின.

இந்தப் பேச்சுவார்த்தைகளுக்கு முன்னதாக, 21வது ஆசியான்-இந்தியா பொருளாதார அமைச்சர்கள் கூட்டம் செப்டம்பர் 2024 மற்றும் 21வது ஆசியான்-இந்தியா உச்சிமாநாடு, 2024 அக்டோபரில் லாவோசின் வியண்டியானில் நடைபெற்றது. இந்த இரண்டு கூட்டங்களிலும் பொருளாதார அமைச்சர்கள் மற்றும் பிரதமர்கள்/தலைவர்கள்  கூட்டுக் குழு பேச்சுவார்த்தைகளை விரைவுபடுத்தவும், 2025 -ல் மறுஆய்வு முடிவடையும் நோக்கில் செயல்படவும் வலியுறுத்தியுள்ளனர். கட்டண பேச்சுவார்த்தைகளை தொடங்குவது குறித்தும் விவாதிக்கப்பட்டது.

ஆசியான் பிரதிநிதிகளின் புது தில்லி விஜயம் மற்றும் அவர்களின்  இருப்பு ஆகியவை தாய்லாந்து மற்றும் இந்தோனேசிய குழுக்களுடன் இருதரப்பு வர்த்தக பிரச்சனைகள் பற்றிய விவாதத்திற்காக இருதரப்பு சந்திப்புகளை கூட்டுவதன் மூலம் பயன்படுத்தப்பட்டது. இந்திய மற்றும் ஆசியான் தலைமைப் பேச்சுவார்த்தையாளர்கள் விவாதத்தில் உள்ள பிரச்சினைகள் மற்றும் முன்னோக்கி செல்லும் வழிகளில் பரஸ்பர புரிதலை வளர்ப்பதற்காக ஒரு தனி சந்திப்பையும் நடத்தினர்.

ஆசியான் ஒரு குழுவாக இந்தியாவின் முக்கிய வர்த்தக பங்காளியாக உள்ளது. இந்தியாவின் உலகளாவிய வர்த்தகத்தில் சுமார் 11% பங்கு இதில் உள்ளது. 2023-24ல் இருதரப்பு வர்த்தகம் 121 பில்லியன் டாலராக  இருந்தது. 2024 ஏப்ரல்-அக்டோபர் காலத்தில் 73 பில்லியன் டாலரை  எட்டியது. கூட்டுக்குழு கூட்டத்தின்  மறுஆய்வு, ஆசியான் பிராந்தியத்துடனான வர்த்தகத்தை நிலையான முறையில் மேம்படுத்துவதில் ஒரு படியாக இருக்கும்.  கூட்டுக் குழுவின் அடுத்த கூட்டம் பிப்ரவரி 2025 -ல் இந்தோனேசியாவின் ஜகார்த்தாவில் தடைபெறும்.

Leave a Reply