வருடாந்திர கடற்படை கல்விச் சங்க (NES-என்இஎஸ்) மாநாடு, 2024 நவம்பர் 20 முதல் 22 வரை கோவாவின் வாஸ்கோ-ட-காமாவில் உள்ள கோவா கடற்படைப் பகுதியின் தலைமையகத்தில் நடைபெற்றது. முக்கிய நிகழ்வுகளில் நிர்வாகக் குழு, மேலாண்மை ஆலோசனைக் குழு (MAC), கல்வி ஆலோசனைக் குழு (AAC) ஆகியவற்றின் கூட்டங்கள் அடங்கும். அங்கு விவாதங்கள் கடற்படை பள்ளிகளுக்கான கொள்கை கட்டமைப்பை மையமாகக் கொண்டதாக இருந்தது. குறிப்பாக தேசிய கல்விக் கொள்கை 2020-ஐ செயல்படுத்துதல் குறித்து ஆலோசிக்கப்பட்டது. பிரதிநிதிகளுக்காக கோவா கடற்படை குழந்தைகள் பள்ளியின் வழிகாட்டுதல் சுற்றுப்பயணமும் ஏற்பாடு செய்யப்பட்டது.
2024 நவம்பர் 22 கடற்படை கல்விச் சங்க (என்இஎஸ்) தலைவர் வைஸ் அட்மிரல் மெக்கார்ட்டி தலைமையில் கூட்டம் நடைபெற்றது. இந்த மாநாட்டில் கடற்படை தலைமையக அதிகாரிகள், நாடு முழுவதும் உள்ள கடற்படை பள்ளிகளின் கல்வி மற்றும் நிர்வாக தலைமைத்துவத்தின் பங்கேற்பும் இடம்பெற்றது.
மாநாட்டின் போது, கடந்த ஆண்டில் கல்வியில் சிறந்து விளங்கிய பள்ளிகளுக்கு என்இஎஸ் தலைவர் கோப்பைகளை வழங்கினார். வைஸ் அட்மிரல் மெக்கார்ட்டி தமது உரையில், கடற்படை வீரர்களின் குழந்தைகளுக்கு தரமான கல்வியை வழங்குவதில் கடற்படை பள்ளிகளின் குறிப்பிடத்தக்க பங்கைப் பாராட்டினார். தேசிய கல்விக் கொள்கை, பிற கொள்கை வழிகாட்டுதல்களை திறம்பட செயல்படுத்துவதன் முக்கியத்துவத்தை அவர் வலியுறுத்தினார்.
எஸ்.சதிஸ் சர்மா