வரலாற்றுச் சிறப்புமிக்க வளர்ச்சியடைந்த இந்தியா இளம் தலைவர்கள் கலந்துரையாடலில் பங்கேற்பதை உறுதி செய்யும் வகையில் வினாடி -வினா போட்டியில் இளைஞர்கள் பங்கேற்க வேண்டும் என்று பிரதமர் திரு நரேந்திர மோடி வலியுறுத்தியுள்ளார். வளர்ச்சியடைந்த இந்தியா என்ற நமது இலக்கை அடைவதற்கு இது அவர்களின் நிலையான பங்களிப்பாக இருக்கும் என்றும் அவர் கூறியுள்ளார்.
சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் பதிவிட்டிருப்பதாவது:
“என் இளைய நண்பர்களே,
ஒரு சுவாரஸ்யமான வினாடி வினா நடைபெற உள்ளது. இது 2025 ஜனவரி 12, அன்று வரலாற்று சிறப்புமிக்க வளர்ச்சியைடந்த இந்தியா இளம் தலைவர்கள் உரையாடலின் ஒரு பகுதியாக அமைவதை உறுதி செய்யும்.
mybharat.gov.in
உங்களது புதுமையான யோசனைகளை அரசின் உயர்மட்டத்தில் உள்ளவர்கள் கேட்க இது ஒரு சிறப்பான வாய்ப்பாகும்.
வளர்ச்சியடைந்த இந்தியா என்ற நமது இலக்கை அடைவதற்கு இது பழ உங்களின் நிலையான பங்களிப்பாக இருக்கும்” என்று பதிவிட்டுள்ளார்.
திவாஹர்