கோவாவில் நடைபெற்ற 55-வது இந்திய சர்வதேச திரைப்பட விழாவில் (ஐ.எஃப்.எஃப்.ஐ) மிகவும் எதிர்பார்க்கப்பட்ட நிறைவு படமான ‘டிரை சீசன்’ (முதலில் சுகோ என்று பெயரிடப்பட்டது) குறித்த பத்திரிகையாளர் சந்திப்பு நடைபெற்றது. பத்திரிகை தகவல் அலுவலகத்தால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இந்த சந்திப்பு, சுற்றுச்சூழல் மற்றும் தலைமுறை சவால்கள் குறித்த திரைப்படத்தின் கூர்மையான ஆய்வை எடுத்துக்காட்டியது.
பசுமையான வயல்களுக்கு மத்தியில் அமைக்கப்பட்ட கதை, ஜோசப் என்ற ஐம்பது வயது விவசாயி, தனது மனைவி ஈவா மற்றும் அவர்களின் மூன்று குழந்தைகளுடன் மாற்று வாழ்க்கை முறைக்காக பாடுபடுகிறார். லாப நோக்குடைய வேளாண் வணிக உரிமையாளரான விக்டருடனான ஜோசப்பின் மோதல், கோடை காலத்தில் வறண்ட கிராமத்தை குடிநீர் இல்லாமல் விட்டுவிடுவதால் தீவிரமடைகிறது. இது அவர்களின் குடும்பங்களுக்கு இடையே பதட்டங்களைத் தூண்டுவதுடன், திரும்பி வரும் மகனுடன் விக்டரின் முரண்பாடான பிணைப்பால் மேலும் சிக்கலாகிறது.
இயக்குநர் போஹ்டன் ஸ்லாமா மனிதர்களுக்கும் சுற்றுச்சூழலுக்கும் இடையிலான உலகளாவிய பிணைப்பை குறித்து எடுத்துரைத்தார், மனித ஆத்மாவைப் பாதுகாப்பதற்கான பிரதிபலிப்பாக இயற்கை வளங்களைப் பாதுகாக்க வேண்டியதன் அவசியத்தையும் அவர் சுட்டிக்காட்டினார். திரைக்கதையை வடிவமைக்கும் உன்னிப்பான பயணத்தைப் பற்றி அவர் பேசினார். திரைக்கதைக்கு மூன்று ஆண்டுகள் ஆன தாகவும் அது 11 திருத்தங்களுக்கு உட்படுத்தப்பட்டது என்றும் தெரிவித்த அவர் திரைப்படத் தயாரிப்பு செயல்முறையை வளப்படுத்திய நடிகர்கள் மற்றும் தயாரிப்பாளர்களின் கூட்டு முயற்சிகளுக்கு நன்றியும் தெரிவித்தார்.
தயாரிப்பாளர் பீட்டர் ஓக்ரோபெக் சிறிய நாடுகளில் கலைப்படங்களுக்கு நிதியளிப்பது மற்றும் உருவாக்குவதில் உள்ள சிக்கல்களைப் பகிர்ந்து கொண்டார், சர்வதேச ஒத்துழைப்புகளின் முக்கியத்துவத்தையும் வலியுறுத்தினார். நிலைத்தன்மை, குடும்பம் மற்றும் தலைமுறை இடைவெளி போன்ற கருப்பொருள்களை பேசுவதன் மூலம் உலகளாவிய பார்வையாளர்களுடன் படம் ஒன்றிணையும் பொருத்தத்தை அவர் பாராட்டினார்.
இளம் பார்வையாளர்கள் தங்கள் எதிர்காலத்தை தாங்களே முடிவு செய்பவர்களாக இருக்குமாறு திரைப்பட தயாரிப்பாளர் கேட்டுக் கொண்டார். ஏனெனில் கதை சமகால பிரச்சினைகளுக்கு ஒரு கண்ணாடியாக செயல்படுகிறது என்றார் . அமர்வின் முடிவில்,ட்ரை சீசன் இந்தியாவில் மட்டுமல்ல, உலகெங்கிலும் அர்த்தமுள்ள உரையாடல்களைத் தூண்டும் என்று போஹ்டன் ஸ்லாமா நம்பிக்கை தெரிவித்தார். இது மனிதகுலத்திற்கும் இயற்கைக்கும் இடையிலான நுட்பமான சமநிலையை பார்வையாளர்களுக்கு நினைவூட்டுகிறது.
திவாஹர்