புத்தாக்க கண்டுபிடிப்புகளை சமூகத்துக்கு பலன் தருபவைகளாக மாற்றுவதற்கு பயனுள்ள அறிவியல் தொடர்பு மிகவும் முக்கியமானது!- டாக்டர் ஜிதேந்திர சிங்.

பயனுள்ள அறிவியல் தகவல்தொடர்புகளின் முக்கியத்துவத்தை  மத்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறை இணையமைச்சர் (தனிப்பொறுப்பு), புவி அறிவியல் துறை  இணையமைச்சர் (தனிப்பொறுப்பு), பிரதமர் அலுவலகம், அணுசக்தித் துறை, விண்வெளித் துறை, பணியாளர்நலன், பொதுமக்கள் குறைதீர்ப்பு  மற்றும் ஓய்வூதியங்கள் துறை இணையமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங் வலியுறுத்தி உள்ளார். புதிய கண்டுபிடிப்புகளை சமூக நலன்களாக மாற்றுவதற்கு பயனுள்ள அறிவியல் தொடர்பு மிகவும் முக்கியமானது என்றார். சிறப்பு அறிவியல் இதழியலும் சிறப்பு அறிவியல் பத்திரிகையாளர்களும் இதில் முக்கிய பங்கு வகிக்க முடியும் என்று அவர் கூறினார்.

மறைந்த பத்திரிகையாளர் மங்களம் சுவாமிநாதனின் நினைவாக நிறுவப்பட்டுள்ள “டாக்டர் மங்களம் சுவாமிநாதன் தேசிய விருதுகள் 2024” வழங்கி பேசிய போது, ​​இந்தியாவில் ஏற்கனவே இருந்த அறிவியல் செய்தி  மற்றும் அறிவியல் இதழியலின் போக்கை துவக்கியவர்களில் மங்களமும் ஒருவர் என்று டாக்டர் ஜிதேந்திர சிங் தெரிவித்தார். தில்லி ஊடகங்கள் மற்றும் கலாச்சார வட்டாரங்களில் நன்கு அறியப்பட்டவராக மங்களம் இருந்தார்.  2017-ல் அவர் அகால மரணமடைந்த நேரத்தில் கூட, புகழ்பெற்ற விஞ்ஞானி ஹோமி பாபாவைப் பற்றி ஒரு புத்தகத்தை அவர் எழுதிக் கொண்டிருந்தார்.

அறிவியல் இதழியல் மற்றும் தகவல்தொடர்பு துறையில் சாதனை படைத்த மறைந்த டாக்டர் மங்கலம் சுவாமிநாதனின் பாரம்பரியத்தை கொண்டாடும் விழாவில் ‘டாக்டர். மங்கலம் சுவாமிநாதன் தேசிய விருதுகள் 2024’-ஐ அமைச்சர் அறிவித்தார். புகழ்பெற்ற பிரமுகர்கள் கலந்து கொண்ட இந்நிகழ்ச்சி, புத்தாக்கம் மற்றும் பொது விழிப்புணர்வை வளர்ப்பதில் அறிவியல் வெளிப்பாட்டின் முக்கியத்துவத்தை அடிக்கோடிட்டுக் காட்டியது.

டாக்டர் மங்கலம் சுவாமிநாதன் தேசிய விருது 2024 பல்வேறு துறைகளில் சிறந்து விளங்குபவர்களை அவர்களின் சிறந்த பங்களிப்புகளுக்காக கௌரவித்தது. பி. நாராயணன் இதழியல் துறையில் சிறந்தவர் என்ற விருதைப் பெற்றார், அதே நேரத்தில் திரு உமேந்திர தத் அறிவியல் செய்தித் திரட்டலில் சிறந்து விளங்கியதற்கு விருது பெற்றார். கலை மற்றும் கலாச்சாரத்தில் சிறந்து விளங்கியதற்காக திரு சத்தியநாராயண ராஜுவும், மருத்துவ முறைகேடுகள் விசாரணையில் சிறந்து விளங்கியதற்காக திரு ஜீஜோ ஜான் புத்தேழத்துக்கும் விருதுகள் வழங்கப்பட்டன.  மேனகா சஞ்சய் காந்திக்கு டாக்டர் மங்கலம் சுவாமிநாதன் அறக்கட்டளையின் தத்தோபந்த் தெங்கடி சேவா விருது 2024 வழங்கப்பட்டது. மேலும் ரெவரன்ட் மோகன் மோர் பெசலியாஸ் , ஜி.ராஜமோகன்,ஹரீஷ் குமார் பி ஆகியோரும் இந்த விருது பெற்றவர்களில்  குறிப்பிடத்தக்கவர்கள் ஆவர் . நசீர் வி. கோயக்குட்டி, அஜித்  நாயர் ஆகியோர் வெளிநாடுவாழ் இந்தியர் தேசிய சிறப்பு விருது 2024 பெற்றனர்.

நிகழ்ச்சியில் பேசிய டாக்டர் ஜிதேந்திர சிங், இந்தியாவில்  அறிவியல் இதழியல் கலாச்சாரத்தை உருவாக்க வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தினார். இந்தப் பிரிவில் நிபுணத்துவம் இல்லாதது குறித்து அவர் வருத்தம் தெரிவித்தார்.  டாக்டர் மங்களம் சுவாமிநாதன், சிறப்பு செய்தி சேகரிப்பின்  புதிய பாரம்பரியத்தை வளர்ப்பதன் மூலம் இந்த நிலையை மாற்றத் தொடங்கினார் என்று அமைச்சர் குறிப்பிட்டார்.

Leave a Reply