43-வது இந்திய சர்வதேச வர்த்தக கண்காட்சி (ஐ.ஐ.டி.எஃப்) -2024 இல் ஏழை கைவினைஞர்கள் அமைத்த அரங்குகளில் சுமார் ரூ.5.85 கோடி விற்பனை.

சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சகத்தின் ஆதரவுடன் வசதியற்ற கைவினைஞர்களால் அமைக்கப்பட்ட அரங்குகள், முழு காலகட்டத்திலும் எதிர்பாராத எண்ணிக்கையிலான பார்வையாளர்களைக் கண்டன மற்றும் புதுதில்லியில் நடைபெற்ற 43-வது இந்திய சர்வதேச வர்த்தக கண்காட்சி (ஐ.ஐ.டி.எஃப்) -2024 இல் சுமார் 5.85 கோடி ரூபாய் நிகர விற்பனையை ஈட்டியது. மத்திய சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் துறை அமைச்சர் டாக்டர் வீரேந்திர குமார், 15.11.2024 அன்று பாரத மண்டபத்தில் அமைச்சக அரங்கைத் திறந்து வைத்தார்.

அசாம், சண்டிகர், சத்தீஸ்கர், தில்லி, குஜராத், ஹரியானா, இமாச்சலப் பிரதேசம், ஜம்மு-காஷ்மீர், கர்நாடகா, மகாராஷ்டிரா, மத்தியப் பிரதேசம், மணிப்பூர், புதுச்சேரி, பஞ்சாப், ராஜஸ்தான், உத்தரப் பிரதேசம், உத்தராகண்ட் மற்றும் மேற்கு வங்கம் உள்ளிட்ட 18 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களிலிருந்து பங்கேற்பு காணப்பட்டது.

ஆயத்த ஆடைகள், கைவினைப் பொருட்கள், பிளாக் பிரிண்டிங், ஜரி பட்டு, சந்தேரி புடவைகள், செயற்கை நகைகள், தோல் பொருட்கள், எம்பிராய்டரி, காலணிகள், கம்பளிப் பொருட்கள், கையால் செய்யப்பட்ட பைகள், கரும்பு மற்றும் மூங்கில், ஊறுகாய், நம்கீன், அகர்பத்தி & வாசனை திரவியங்கள், ராஜஸ்தானி மோஜ்ரி மற்றும் பொம்மைகள் உள்ளிட்ட பல்வேறு வகையான தயாரிப்புகள் காட்சிக்கு வைக்கப்பட்டிருந்தன.

Leave a Reply