ஆயுஷ் அமைச்சகத்தின் பத்தாண்டு சாதனைகளை புதிய மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தித் துறை இணையமைச்சர் ஸ்ரீபாத் யசோ நாயக் சுட்டிக் காட்டினார்.

ஆயுஷ் அமைச்சகம் கடந்த பத்தாண்டுகளில் ஒரு மாற்றத்தை ஏற்படுத்தும் பயணத்தைக் கண்டுள்ளது. பாரம்பரிய மருத்துவத்தில் உலகளாவிய தலைமைத்துவமாக தன்னை நிலைநிறுத்தியுள்ளது. 2014-ம் ஆண்டில் தொடங்கப்பட்டதிலிருந்து, திரு பிரதமர் நரேந்திர மோடியின் தொலைநோக்கு தலைமையின் கீழ், அமைச்சகம் பொது சுகாதாரம், கல்வி, ஆராய்ச்சி மற்றும் பொருளாதார மேம்பாடு ஆகியவற்றில் குறிப்பிடத்தக்க முன்னேற்றங்களை ஏற்படுத்தியுள்ளது.

மத்திய இணையமைச்சர் திரு ஸ்ரீபாத் யசோ நாயக், ஆயுஷ் துறையில் ஏற்பட்டுள்ள குறிப்பிடத்தக்க முன்னேற்றங்களை கோடிட்டுக் காட்டினார். பாரம்பரிய இந்திய மருத்துவத்தை பிரதான சுகாதார சேவையுடன் ஒருங்கிணைப்பதில் அமைச்சகம் மேற்கொண்டு வரும் முயற்சிகளை எடுத்துரைத்தார்.

முக்கிய சிறப்பம்சங்கள்

ஆயுஷ் உள்கட்டமைப்பை விரிவுபடுத்துதல்

பதிவுசெய்யப்பட்ட ஆயுஷ் பயிற்சியாளர்கள்: 755,780 க்கும் அதிகமானோர் உள்ளனர்.

கல்வி: 886 இளங்கலை மற்றும் 251 முதுகலை கல்லூரிகளில் 59,643 இளநிலை மாணவர்களும், 7,450 முதுகலை மாணவர்களும் ஆண்டுதோறும் சேர்க்கப்படுகின்றனர்.

சுகாதாரம்: 3,844 ஆயுஷ் மருத்துவமனைகள் மற்றும் 36,848 மருந்தகங்கள் (3,403 மருத்துவமனைகள் மற்றும் 27,118 அரசு துறையின் கீழ் மருந்தகங்கள்).

தேசிய நிறுவனங்கள்: அகில இந்திய ஆயுர்வேத நிறுவனம், கோவா, தேசிய யுனானி மருத்துவ நிறுவனம், காஜியாபாத், தேசிய ஹோமியோபதி நிறுவனம், தில்லி ஆகியவை 2022  டிசம்பர் 11 அன்று பிரதமரால் திறந்து வைக்கப்பட்டன. இளங்கலை, முதுகலை மற்றும் முனைவர் படிப்புகளில் 400 இடங்கள் சேர்க்கப்பட்டுள்ளன.

ஆராய்ச்சி மற்றும் கண்டுபிடிப்பு

ஆயுஷ் ஆராய்ச்சி தளத்தில் 43,000 க்கும் மேற்பட்ட ஆய்வுகள் வழங்கப்படுகின்றன. இது ஆதார அடிப்படையிலான சுகாதாரத்தை வலியுறுத்துகிறது.

Leave a Reply