கடந்த இரண்டு ஆண்டுகளில் உணவு மற்றும் பானங்கள் பிரிவின் கீழ் நுகர்வோர் ஆணையங்களில் 533 நுகர்வோர் புகார்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையம் (FSSAI) 2008 ஆம் ஆண்டில் உணவு பாதுகாப்பு மற்றும் தரநிலைகள் சட்டம், 2006 இன் கீழ் முதன்மையாக உணவுப் பொருட்களுக்கான அறிவியல் அடிப்படையிலான தரங்களை நிர்ணயிப்பதற்கும், அவற்றின் உற்பத்தி, சேமிப்பு, விநியோகம், விற்பனை மற்றும் இறக்குமதி ஆகியவற்றை ஒழுங்குபடுத்துவதற்கும் மனித நுகர்வுக்கு  பாதுகாப்பான மற்றும் முழுமையான உணவு கிடைப்பதை உறுதி செய்வதற்காக நிறுவப்பட்டது.

உணவுப் பாதுகாப்பு மற்றும் தர நிர்ணயச் சட்டத்தில் தரமற்ற உணவு, தவறான முத்திரையிடப்பட்ட உணவு மற்றும் பாதுகாப்பற்ற உணவு தொடர்பான தண்டனை நடவடிக்கைகளுக்கான குறிப்பிட்ட விதிகள் உள்ளன. FSSAI அதன் பிராந்திய அலுவலகங்கள் மற்றும் மாநில / யூனியன் பிரதேசங்கள் மூலம் பால், பால் பொருட்கள் மற்றும் குழந்தை உணவு உட்பட உணவுப்பொருட்களின் மாதிரிகள்  வழக்கமான மேற்பார்வை, கண்காணிப்பு, ஆய்வு, 

 ஆகியவற்றுக்கு உட்படுத்தப்படும். உணவு மாதிரிகள் விதிமுறைகளுக்கு ஏக்ற்ப இல்லாத நேர்வுகளில், உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணயச் சட்டம், விதிகள் மற்றும் ஒழுங்குமுறைகளின்படி உணவு வணிகர்கள் மீது தண்டனை நடவடிக்கை எடுக்கப்படுகிறது. மேலும், தொலைதூரப் பகுதிகளிலும் அடிப்படை பரிசோதனை வசதிகளை விரிவுபடுத்தும் வகையில், உணவு பாதுகாப்பு மற்றும் நடமாடும் உணவு பரிசோதனை ஆய்வகங்களை எப்எஸ்எஸ்ஏஐ வழங்கியுள்ளது.

நுகர்வோர் பாதுகாப்புச் சட்டம், 2019 இன் பிரிவு 90 மற்றும் 91 ஆகியவை கலப்படம் அல்லது போலியான பொருட்களைக் கொண்ட எந்தவொரு தயாரிப்பையும் உற்பத்தி செய்வதற்கு  அல்லது சேமித்து வைப்பதற்கும் அல்லது விற்பனை செய்வதற்கும் அல்லது விநியோகிப்பதற்கும் அல்லது இறக்குமதி செய்வதற்கும் தண்டனையை வழங்குகின்றன, இதில் நுகர்வோருக்கு ஏற்படும் தீங்கின் அளவைப் பொறுத்து சிறைத்தண்டனை அல்லது அபராதம் விதிக்கபடும்.

கடந்த இரண்டு ஆண்டுகளில் நுகர்வோர் ஆணையங்களில் உணவு மற்றும் பானங்கள் பிரிவின் கீழ் பதிவு செய்யப்பட்ட நுகர்வோர் புகார்களைப் பொறுத்தவரை தமிழ்நாட்டில் 30 புகார்களும், புதுச்சேரியில் 9 புகார்களும் பதிவு செய்யப்பட்டுள்ளன.

Leave a Reply