இந்திய விண்வெளி மருத்துவ சங்கத்தின் 63வது வருடாந்திர மாநாட்டை பெங்களூருவில் டிசம்பர் மாதம் 05-ம் தேதி முதல் 07-ம் தேதிவரை விண்வெளி மருத்துவ நிறுவனம் நடத்தவுள்ளது. இந்த நிறுவனம் ராணுவம், சிவில் விண்வெளி மருத்துவம், நாட்டின் விண்வெளி விமானத் திட்டத்தின் மனித அம்சங்கள் உட்பட பல்வேறு செயல்பாடுகளை கொண்டுள்ளது. இச்சங்கம் 1952-ம் ஆண்டில் நிறுவப்பட்டது. இது இந்தியாவில் விண்வெளி மருத்துவத்தின் அறிவு மற்றும் நடைமுறையை மேம்படுத்துவதற்காக அர்ப்பணிக்கப்பட்ட பதிவு செய்யப்பட்ட சங்கம் என்பது குறிப்பிடத்தக்கது.
ஆராய்ச்சிப் பணிகளை மேம்படுத்துதல், அறிவு பரிமாற்றத்தை ஊக்குவித்தல், வான்மருத்துவ சவால்களுக்கு தீர்வு காணுதல் ஆகியவற்றை நோக்கமாகக் கொண்டு, இந்திய விண்வெளி மருத்துவ சங்கம் 1954-ம் ஆண்டு முதல் வருடாந்திர அறிவியல் மாநாட்டை நடத்தி வருகிறது. தற்போது நடைபெறும் மாநாடு ‘ஆராய்ச்சிப் பணிகளுக்கான ஒத்துழைப்பு’ என்ற கருப்பொருளில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இது விமான போக்குவரத்து, விண்வெளி மருத்துவத் துறைகளில் ஒத்துழைப்பு மற்றும் புதிய கண்டுபிடிப்புகளை மேம்படுத்துவதற்கான முன்னோக்கு சிந்தனையை எடுத்துக்காட்டுவதாக உள்ளது. விண்வெளி மருத்துவத் துறையில் பயனுள்ள ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டை முன்னெடுத்துச் செல்ல ஏதுவாக, பல்வேறு துறைகளுடன் இணைந்து தீர்வு காணுவதற்கான அவசியத்தையும் வலியுறுத்துகிறது.
எம்.பிரபாகரன்