மத்திய ஜல் சக்தித்துறை அமைச்சர் திரு சி.ஆர்.பாட்டீல் தலைமையில் ராஜஸ்தானில் கிராமப்புற தூய்மை இந்தியா இயக்கம் குறித்த ஆய்வு கூட்டம் தில்லியில் நடைபெற்றது. கிராமப்புற ராஜஸ்தான் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் கண்டுள்ளது. ராஜஸ்தான், ஓடிஎஃப் பிளஸ் மாதிரி முன்னேற்றத்தில் நாட்டில் 10-வது இடத்தைப் பிடித்துள்ளது. அதன் கிராமங்களில் 98% கிராமங்கள் ஓடிஎஃப் பிளஸ் ஆக அறிவிக்கப்பட்டுள்ளன.
கூட்டத்தின் போது, மத்திய அமைச்சர் ராஜஸ்தானை அதன் சாதனைகளுக்காக பாராட்டினார். 43,447 கிராமங்களில் 36,971 கிராமங்கள் இப்போது ஓடிஎஃப் பிளஸ் மாதிரியாக உள்ளன என்றும் இதில் மாநிலத்தை மேலும் முன்னேற்றம் அடையச் செய்ய வேண்டும் என்றும் அமைச்சர் திரு சி.ஆர். பாட்டீல் வலியுறுத்தினார்.
ராஜஸ்தான் மாநிலம் அதன் இலக்குகளை அடைவதை உறுதி செய்வதற்கான உறுதிப்பாட்டுடன் கூட்டம் முடிவடைந்தது. தூய்மை தொடர்பாக, ஜல் சக்தி அமைச்சகத்தின் ஆதரவுடன், வரும் மாதங்களில் மாநிலத்தில் குறிப்பிடத்தக்க பணிகள் மேற்கொள்ளப்பட்ட உள்ளன.
எஸ்.சதிஸ் சர்மா