புதுதில்லியில் உள்ள கனாட் பிளேஸில் இன்று (04.12.2024) நடைபெற்ற சாரஸ் உணவுத் திருவிழாவில் மத்திய ஊரக மேம்பாடு, வேளாண்மை,விவசாயிகள் நலத்துறை அமைச்சர் திரு சிவ்ராஜ் சிங் சௌகான் பங்கேற்றார். மத்திய ஊரக வளர்ச்சித் துறை இணையமைச்சர்கள் திரு கமலேஷ் பாஸ்வான், டாக்டர் சந்திரசேகர் பெம்மசானி, செயலாளர் சைலேஷ் குமார், கூடுதல் செயலாளர் திரு சரண்ஜித் சிங் (தீன்தயாள் அந்தியோதயா யோஜனா – தேசிய ஊரக வாழ்வாதார இயக்கம்), இணைச் செயலாளர் (ஊரக வாழ்வாதாரம்) திருமதி ஸ்மிருதி சரண், அமைச்சகத்தின் பிற அதிகாரிகள் இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.
நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர் திரு சிவ்ராஜ் சிங் சௌகான் மகளிர் சுய உதவிக் குழு உறுப்பினர்களால் தயாரிக்கப்பட்ட பாரம்பரிய உணவுகள், சரஸ் மேளாவை மிகவும் வசீகரமானதாக மாறியுள்ளது என்று கூறினார். பல்வேறு மொழிகள், உடைகள், பாரம்பரியங்கள், உணவு வகைகளுடன் நமது நாடு பன்முகத்தன்மை வாய்ந்ததாக உள்ளது என்று அவர் குறிப்பிட்டார். ஜார்கண்ட், சத்தீஸ்கர், பீகார், ராஜஸ்தான், பஞ்சாப், கேரளா, கர்நாடகா போன்ற மாநிலங்களின் பாரம்பரிய உணவு வகைகளை குறிப்பிட்ட அவர், நமது நாட்டின் அனைத்துப்பகுதி உணவுகளும் அற்புதமானவை என்று கூறினார்.
பிரதமர் திரு நரேந்திர மோடியின் தீர்மானம் மகளிருக்கு அதிகாரம் அளிப்பது என்றும், அவர்களை மேம்படுத்துவது அரசின் முக்கிய நோக்கம் என்றும் அவர் தெரிவித்தார். சரஸ் மேளாவின் பின்னணியில் உள்ள ஒட்டுமொத்த குழுவினருக்கும் வாழ்த்துக்களைத் தெரிவித்த அமைச்சர் திரு சிவராஜ் சிங் சௌகான், சரஸ் மேளாவில் பங்கேற்குமாறு தில்லி மக்களுக்கு அழைப்பு விடுத்தார்.
எம்.பிரபாகரன்