இந்தியாவின் தொலைதூர மூலைகளுக்கு தொழில்நுட்பம் சென்றடைவதைக் கண்டு உலகமே வியப்படைகிறது; குடியரசுத் துணைத்தலைவர்

140 கோடி மக்கள் வசிக்கும் நாட்டில் தொழில்நுட்பம் அதிவேகமாக முன்னேறி வருவதை உலகமே வியப்பில் ஆழ்த்தியுள்ளது என்று குடியரசு  துணைத் தலைவர் திரு ஜக்தீப் தன்கர் தெரிவித்துள்ளார். தொழில்நுட்பம் மூலம் சேவை வழங்குவது எளிதாக்கப்படுகிறது. மின்சாரக் கட்டணத்திற்காக வரிசையில் நிற்பது, நிர்வாகச் சேவைக்காக வரிசையில் நிற்பது என்ற நிலை மாறி ,  இன்று இவை அனைத்தும் நம் உள்ளங்கைக்குள் வந்துவிட்டன. இது சிரமமின்றி நடக்கிறது. இது ஒரு பெரிய புரட்சி என்று அவர் குறிப்பிட்டார்.

பீகார் மாநிலம் மோதிஹாரியில் இன்று நடைபெற்ற மகாத்மா காந்தி மத்தியப் பல்கலைக்கழகத்தின் 2வது பட்டமளிப்பு விழாவில் மாணவர்களிடையே உரையாற்றிய திரு  தன்கர், 2047-க்குள் வளர்ந்த இந்தியா என்பது வெறும் கனவு மட்டுமல்ல; அது எங்கள் இலக்கு. இருப்பினும், இந்த இலக்கை அடைவதற்கு அனைவரின் பெரும் தியாகங்களும் பங்களிப்புகளும் தேவைப்படும் என்றார்.

பீகாரில் ஏற்பட்ட மாற்றத்தை பிரதிபலித்த அவர்,  “இந்த நிலம் மீண்டும் பிரகாசிக்கத் தொடங்கியுள்ளது. நாளந்தா மறைந்துவிட்டது, ஆனால் இப்போது நளந்தா மீண்டும் ஒருமுறை தெரியும். நான் நாளந்தாவுக்குச் சென்றேன். இப்போது இங்கு உருவாக்கம் நடக்கிறது, வளர்ச்சி நடைபெறுகிறது. சட்டம் மற்றும் ஒழுங்கில் ஒரு புதிய பரிமாணம் சேர்க்கப்பட்டுள்ளது – இது சிறிய சாதனை அல்ல; இது ஒரு குறிப்பிடத்தக்க சாதனை  என்று கூறினார்.

Leave a Reply