தமிழ்நாடு சிறுபான்மையினர் பொருளாதார மேம்பாட்டு கழகத்தின் மூலம் கடன் உதவிகளை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் வழங்கினார்.
முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று (13.12.2024) தலைமைச் செயலகத்தில், பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை சார்பில், தமிழ்நாட்டில் உள்ள தொன்மையான கிறித்தவ தேவாலயங்கள், இஸ்லாமிய பள்ளிவாசல்கள், தர்காக்களை புனரமைத்தல், பழுதுபார்த்தல் பணிகளை மேற்கொள்ள அரசு நிதி உதவி அளித்தல் மற்றும் கிறித்தவர்களுக்கான கல்லறைத் தோட்டம் மற்றும் இஸ்லாமியர்களுக்கான கபர்ஸ்தான்களுக்கு புதிதாகச் சுற்றுச்சுவர், பாதை அமைத்தல், புனரமைத்தல் பணிகளை மேற்கொள்ள அரசு நிதி உதவி வழங்கும் திட்டங்களின் கீழ் 3 கோடியே 61 லட்சத்து 82 ஆயிரத்து 208 ரூபாய்க்கான காசோலைகளை தேவாலயங்கள் மற்றும் தர்காக்களின் நிர்வாகிகளிடமும், தமிழ்நாடு சிறுபான்மையினர் பொருளாதார மேம்பாட்டு கழகத்தின் மூலம் 2 பயனாளிகளுக்கு தனிநபர் கடன் வழங்கும் திட்டத்தின் கீழ் 3.80 லட்சம் ரூபாய்க்கான காசோலைகளையும் வழங்கினார்.
சி.கார்த்திகேயன்