பணியிடங்களில் பாலியல் வன்கொடுமை தடுப்பு குறித்த பயிலரங்கு.

பாலின சமத்துவத்தை ஊக்குவிக்கவும், பணியிடங்களில் பாலியல் வன்கொடுமையை தடுப்பது  குறித்த பயிலரங்கு புதுதில்லியில் நடைபெற்றது. 2024 டிசம்பர் 12-ம் தேதி அன்று புது தில்லியில்  உள்ள  நவ் சேனா பவன் அரங்கத்தில் நடைபெற்ற இந்தப் பயிலரங்கை இந்திய கடற்படை ஏற்பாடு செய்துள்ளது.

இந்தப் பயிலரங்கை ஆயுதப்படை மருத்துவ சேவைப்பிரிவு இயக்குநர் வைஸ் அட்மிரல் ஆர்த்தி சரின் தொடங்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில் பேசிய அவர், பணியிடங்களில் பாலினச் சமத்துவத்தை பின்பற்ற வேண்டிய அவசியம் குறித்து வலியுறுத்தினார். பணியிடங்களில் பணி புரியும் அனைத்து பணியாளர்களின் பாதுகாப்பு மற்றும் கண்ணியத்தை உறுதி செய்வதில் பாலியல் வன்கொடுமை தடுப்புச் சட்டம் முக்கிய பங்கு வகிப்பதாக அவர் குறிப்பிட்டார்.

பாலின உணர்திறன், பணியிடங்களில் பாதிப்பை ஏற்படுத்தும் சமூக இயக்கவியல் குறித்த நுண்ணறிவுப் பகுப்பாய்வை நொய்டாவில் உள்ள வி.வி.கிரி தேசிய தொழிலாளர் நிறுவனத்தின் மூத்த ஆய்வாளர் டாக்டர் சஷி பாலா விரிவாக எடுத்துரைத்தார்.

Leave a Reply