தில்லியில் குளிர்கால மாதங்களில் காற்றின் தர சூழ்நிலைக்கான நடவடிக்கை.

தில்லி-என்.சி.ஆரில் குளிர்கால மாதங்களில் பொதுவாக பாதகமான காற்றின் தர சூழ்நிலையைச் சமாளிப்பதற்கான நடவடிக்கைகளை வலுப்படுத்தும் வகையில், என்.சி.ஆர் மற்றும் அருகிலுள்ள பகுதிகளில் காற்றின் தர மேலாண்மை ஆணையம் (சி.ஏ.க்யூ.எம்) முழு என்.சி.ஆருக்கும் தரப்படுத்தப்பட்ட செயல் திட்டத்தை  திருத்தியுள்ளது.

GRAP என்பது தில்லியில் சராசரி தர  அளவை அடிப்படையாகக் கொண்ட அவசரகால நடவடிக்கை  பொறிமுறையாகும், இது தில்லியில் காற்றின் தரம் மோசமடைந்து வரும் சூழ்நிலைகளுக்கு பதிலளிக்க பல பங்குதாரர்கள், செயல்படுத்தும் முகவர் மற்றும் அதிகாரிகளை ஒன்றிணைக்கிறது. கடந்த ஆண்டுகளில் அறிவியல் தரவுகள், பங்குதாரர்களின் உள்ளீடுகள், வல்லுநர் பரிந்துரைகள் மற்றும் கள அனுபவம் மற்றும் கற்றல் ஆகியவற்றை கவனமாக பரிசீலித்த பின்னர்  ஜி.ஆர்.ஏ.பி உருவாக்கப்பட்டுள்ளது.

Leave a Reply