3 வது சிஐஎல் சிஎஸ்ஆர் மாநாடு கொல்கத்தாவில் தொடங்கியது.

இந்தியாவின் பெருநிறுவன சமூக பொறுப்புணர்வு சட்டம் மற்றும் கோல் இந்தியா நிறுவனத்தின் சிஎஸ்ஆர் நிறுவனமயமாக்கலின் பத்தாண்டுகளைக் கொண்டாடும் வகையில், 3-வது சிஐஎல் சிஎஸ்ஆர் மாநாடு கொல்கத்தாவில் இன்று தொடங்கியது. மாநாட்டைத் தொடங்கி வைத்துப் பேசிய மேற்கு வங்க ஆளுநரும், நிகழ்ச்சியின் தலைமை விருந்தினருமான டாக்டர் சி.வி.ஆனந்த போஸ், கோல் இந்தியா நிறுவனத்தின் சிஎஸ்ஆர் முன்முயற்சிகளைப் பாராட்டினார். சி.ஐ.எல்-ன் சமூக அர்ப்பணிப்பு பற்றி குறிப்பிட்ட போஸ், “நாம் ஒரு உருமாறும் சகாப்தத்தில் வாழ்கிறோம், உறவுகளை உருவாக்குவதற்கு அவசியமான எல்லைகளுக்கு அப்பால் நாம் பார்க்க வேண்டும்” என்று கூறினார்.

கார்ப்பரேட் சமூகப் பொறுப்புணர்வு (சிஎஸ்ஆர்) குடையின் கீழ், சி.ஐ.எல் நிறுவனம் நிறுவனமயமாக்கப்பட்டதிலிருந்து பத்தாண்டுகளில் ரூ.5,579 கோடியை செலவிட்டுள்ளது, இது சட்டப்பூர்வ தேவையை விட 31 சதவீதம் அதிகமாகும். சி.எஸ்.ஆர் செலவினத்தில் நாட்டின் முதல் மூன்று கார்ப்பரேட் நிறுவனங்களில் சிஐஎல் உள்ளது.

சட்டப்பூர்வமாக கட்டாயமாக்கப்பட்ட சிஎஸ்ஆர்-ன் முதல் ஆண்டான நிதியாண்டு 2015 தொடங்கி, நிதியாண்டு  2024 வரையிலான பத்து ஆண்டு காலத்தில், சிஐஎல் ரூ.4,265 கோடியை செலவிட கட்டாயப்படுத்தப்பட்டது, ஆனால் நிறுவனம் அதை விட ரூ. 1,314 கோடி அதிகமாக இருந்தது. இக்காலகட்டத்தில் ஆண்டு சராசரி சமூக பொறுப்பு செலவு ரூ.558 கோடியாக இருந்தது.

 நிலக்கரி அமைச்சகத்தின் செயலாளரும், கௌரவ விருந்தினருமான திரு விக்ரம் தேவ் தத் பேசுகையில், சி.எஸ்.ஆர் என்பது கோல் இந்தியா நிறுவனம், அதன் துணை நிறுவனங்களுக்கு நம்பிக்கைக்குரிய விஷயம் என்றும், ஜனவரி முதல் ஒவ்வொரு மாதமும் கருப்பொருள் அடிப்படையிலான பெருநிறுவன சமூக பொறுப்புணர்வு இருக்கும் என்றும் கூறினார். நிகழ்ச்சியில் பேசிய கோல் இந்தியா நிறுவனத்தின் தலைவர் திரு பி.எம்.பிரசாத், சிஐஎல் பெருநிறுவன சமூக பொறுப்புணர்வு நடவடிக்கைகளுக்கு தன்னை அர்ப்பணித்துக் கொண்டுள்ளது என்றும், கடந்த பத்தாண்டுகளில் நாடு தழுவிய அளவில் ரூ.5,570 கோடியை பெருநிறுவன சமூக பொறுப்புணர்வுக்காக செலவிட்டுள்ளது என்றும் அதில் பெரும்பகுதி சுகாதாரம் மற்றும் கல்வியில் கவனம் செலுத்துகிறது என்றும் கூறினார். 

சுகாதாரம், கல்வி மற்றும் வாழ்வாதாரம் ஆகியவற்றில் கோல் இந்தியா நிறுவனம் கவனம் செலுத்தியிருப்பது, பத்தாண்டின் மொத்த சமூக பொறுப்பு செலவினமான ரூ.5,579 கோடியில், இந்த மூன்று அத்தியாவசியத் துறைகளுக்கும் 71% ரூ.3,978 கோடியாக ஒதுக்கப்பட்டது.  மொத்த ஒதுக்கீட்டில் 50 சதவீதத்திற்கு அருகில் ரூ.2,770 கோடியுடன் சுகாதாரத் துறை முதலிடத்தில் உள்ளது. கல்வி மற்றும் வாழ்வாதாரம் 1,208 கோடி ரூபாய், இது மொத்தத்தில் ஐந்தில் ஒரு பங்காகும். மீதமுள்ள தொகை கிராமப்புற மேம்பாடு மற்றும் சுற்றுச்சூழல் நிலைத்தன்மை, விளையாட்டு ஊக்குவிப்பு, பேரிடர் மேலாண்மை போன்ற பிற துறைகளுக்குப்  பகிர்ந்தளிக்கப்பட்டது.

ஒடிசா, சத்தீஸ்கர், ஜார்க்கண்ட், மத்தியப் பிரதேசம் மற்றும் மகாராஷ்டிராவை மையமாகக் கொண்டு, செயல்பாட்டில் உள்ள எட்டு மாநிலங்களில் 95 சதவீத சிஎஸ்ஆர் நிதி பயன்படுத்தப்பட்டது.

Leave a Reply