பெரு நிறுவனங்களில் வரிப் பிடித்தம் செய்பவர்களுக்கான விழிப்புணர்வு கருத்தரங்கம்.

வருமான வரி ஆணையரகத்தின் தலைமை ஆணையர் (டி.டி.எஸ்) அவர்களின் வழிகாட்டுதலின்படி, சென்னை வருமான வரி கூடுதல் ஆணையர், டி.டி.எஸ் சரகம் 3 அலுவலகம், பெரு நிறுவனங்களில் வரிப் பிடித்தம் செய்பவர்களுக்கான விழிப்புணர்வு கருத்தரங்கினை 19-12-2024 (வியாழக்கிழமை) அன்று சென்னை நுங்கம்பாக்கத்திலுள்ள வருமானவரி அலுவலகத்தின் திருவள்ளூர் அரங்கில் நடத்தியது. இதில் பெரு நிறுவனங்களில் வரிப் பிடித்தம் செய்யும் பிரதிநிதிகள் பங்கேற்றனர். இந்த நிகழ்ச்சி தமிழ்த்தாய் வாழ்த்துடன் தொடங்கியது.

சென்னை வருமான வரித்துறை ஆணையர் திரு எம். முரளி தொடக்க உரையாற்றினார். சென்னை வருமான வரித்துறை தலைமை ஆணையர் திரு. எல்.ராஜசேகர் ரெட்டி சிறப்புரையாற்றினார்.

நிகழ்ச்சியின் தலைமை விருந்தினராக கலந்து கொண்ட வருமான வரித்துறை முதன்மை தலைமை ஆணையர் திருமதி. ப்ரீத்தி கார்க், தலைமை உரையாற்றினார்.

வரி பிடித்தம் (டி.டி.எஸ்) /  வரி வசூல் (டி.சி.எஸ்) விதிகள், உட்பட பல்வேறு அம்சங்களில் அண்மையில் மேற்கொள்ளப்பட்ட திருத்தங்கள் குறித்து வருமான வரி துணை ஆணையர் (டி.டி.எஸ்) திரு. ஆர்.ராஜமனோகர் விரிவாக எடுத்துரைத்தார். மேலும் வருமானவரி தொடர்பாக தாக்கல் செய்யப்பட்டு நிலுவையில் உள்ள மேல்முறையீட்டு மனுதாரர்கள் சுமூகமாக வருமானவரி தொடர்பான நடைமுறைகளை முடித்து கொள்வதற்கான திட்டம் (விவாத் சே விஸ்வாஸ்) குறித்து விளக்கினார்.

பின்னர் நடைபெற்ற கலந்துரையாடல் நிகழ்ச்சியில், வருமான வரித் துறை முதன்மை தலைமை ஆணையர் (தமிழ்நாடு & புதுச்சேரி) திருமதி ப்ரீத்தி கார்க்,  சென்னை வருமான வரித்துறை தலைமை ஆணையர் திரு. ராஜசேகர் ரெட்டி,   சென்னை வருமான வரித்துறை ஆணையர் திரு எம். முரளி, சென்னை வருமான வரித்துறை கூடுதல் ஆணையர் எம். கார்த்திகேயன் ஆகியோர் வரிப் பிடித்தம் தொடர்பான விதிகள் குறித்து விளக்கம் அளித்தனர்.

சென்னை வருமான வரித்துறை இணை ஆணையர் திரு. மெஹர்சந்த்,  வருமானவரி அதிகாரி திரு கே.செந்தில் குமார், (டி.டி.எஸ்) ஆகியோர் நன்றியுரை வழங்கினார், தேசிய கீதத்துடன் நிகழ்ச்சி நிறைவடைந்தது.

Leave a Reply