மேற்கு வங்கத்தின் சிலிகுரியில் நடைபெற்ற சஷஸ்திர சீமா பல் படைப்பிரிவின் 61-வது நிறுவன தின விழாவில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா கலந்து கொண்டார்.

மேற்கு வங்கத்தின் சிலிகுரியில் நடைபெற்ற சஷஸ்திர சீமா பல் படைப்பிரிவின் 61-வது நிறுவன தின விழாவில் மத்திய உள்துறை மற்றும் கூட்டுறவுத்துறை அமைச்சர் திரு அமித் ஷா கலந்து கொண்டார். அகர்தலாவில் ஒருங்கிணைந்த சோதனைச் சாவடி மற்றும் பெட்ராபோலில் புதிதாக கட்டப்பட்ட எல்லை பாதுகாப்புப் படையின் குடியிருப்பு வளாகத்தையும் மத்திய உள்துறை அமைச்சர் காணொலி மூலம் திறந்து வைத்தார். இந்த நிகழ்ச்சியில், மூத்த அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.

மத்திய உள்துறை அமைச்சர் தமது உரையின் தொடக்கத்தில், நாட்டின் எல்லைகளைப் பாதுகாப்பதிலும், கிழக்குப் பிராந்தியத்திலிருந்து இடதுசாரி தீவிரவாதத்தை ஒழிப்பதிலும் தங்கள் உயிரைத் தியாகம் செய்த துணிச்சலான வீரர்களுக்கு மரியாதை செலுத்தினார். உயிர்த்தியாகம் செய்த வீரர்களின் குடும்பத்தினரிடம், அவர்களின் துணிச்சலான மகன்களின் தியாகம் நாட்டிற்கு ஒரு புதிய வாழ்க்கை, ஆற்றல் மற்றும் உற்சாகத்தை அளித்துள்ளது என்றும், ஒட்டுமொத்த நாடும் அவர்களைப் பற்றி பெருமிதம் கொள்கிறது என்றும் உள்துறை அமைச்சர் கூறினார். 61 ஆண்டுகளில் இந்தப் படைப்பிரிவு, 4 பத்மஸ்ரீ, 1 கீர்த்தி சக்ரா, 6 ஷௌர்ய சக்ரா, 2 குடியரசுத் தலைவரின் வீரதீர பதக்கங்கள், 25 போலீஸ் வீரதீர பதக்கங்கள் மற்றும் 35 வீரதீர பதக்கங்களை பெற்றுள்ளது என்று திரு ஷா கூறினார். எஸ்.எஸ்.பி.க்கு கிடைத்த இந்த தேசிய அளவிலான கௌரவங்கள், அதன் வீரர்கள் தங்கள் கடமைகளை நிறைவேற்றுவதில் எவ்வளவு உறுதியாக இருக்கிறார்கள் என்பதைக் காட்டுகிறது என்று அவர் கூறினார்.

இந்தியாவின் எல்லையோர கிராமங்களின் கலாச்சாரம், மொழி மற்றும் வளமான பாரம்பரியத்தை நாட்டின் பிரதான நீரோட்டத்துடன் இணைக்கும் தனித்துவமான பணியை சஷஸ்திர சீமா பல் செய்துள்ளது என்று திரு அமித் ஷா கூறினார். எஸ்.எஸ்.பி. தனது கடமைகள் மூலம் “சேவை, பாதுகாப்பு மற்றும் சகோதரத்துவம்” என்ற குறிக்கோளை நிறைவேற்றியுள்ளது என்று அவர் கூறினார். நேபாளம் மற்றும் பூடானுடன் நம்பிக்கை, பாரம்பரியம் மற்றும் நட்பின் பாரம்பரியத்தை எஸ்எஸ்பி முன்னெடுத்துச் செல்வதாக அவர் தெரிவித்தார்.

1963-ம் ஆண்டு நிறுவப்பட்டதிலிருந்து, எல்லையோர கிராமங்களில் தேசபக்தியையும், இந்தியாவுடனான பற்றுதலையும் எஸ்.எஸ்.பி உருவாக்கியுள்ளது என்று அவர் கூறினார். நேபாளம் மற்றும் பூட்டானுடனான 2450 கிலோமீட்டர் நீளமுள்ள இந்திய எல்லையில் எஸ்.எஸ்.பி ஜவான்கள் காவலுக்கு நிற்பதால் நாட்டு மக்களுக்கு அவர்களின் பாதுகாப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது என்று திரு ஷா கூறினார்.

61 ஆண்டுகால புகழ்பெற்ற வரலாற்றில், சேவை, பாதுகாப்பு, சகோதரத்துவம், தேசத்திற்கான சேவை, அர்ப்பணிப்பு மற்றும் தேசத்திற்கு முதன்மையான சேவை உணர்வு ஆகியவற்றின் தாரக மந்திரமாக எஸ்எஸ்பி திகழ்கிறது என்று திரு அமித் ஷா கூறினார். போதைப்பொருள் கடத்தல், ஆட்கடத்தல், ஆயுதக் கடத்தல் மற்றும் எல்லையில் தேச விரோத சக்திகளின் ஊடுருவல் ஆகியவற்றை எஸ்.எஸ்.பி வீரர்கள் முன்கூட்டியே தடுத்து நிறுத்தியுள்ளனர் என்று திரு ஷா கூறினார். சிஆர்பிஎஃப் மற்றும் உள்ளூர் போலீஸ் படையுடன் ஒருங்கிணைந்து முழு கிழக்கு பிராந்தியத்தையும் நக்சல் இல்லாததாக மாற்றுவதில் எஸ்.எஸ்.பி முக்கிய பங்கு வகித்துள்ளது என்று அவர் கூறினார்.

பிரதமர் திரு நரேந்திர மோடியின் தலைமையின் கீழ், மத்திய அரசு ஆயுஷ்மான் அட்டை, பாசறைகள், சிஏபிஎஃப் மின்னணு வீட்டுவசதி மற்றும் கல்வி உதவித்தொகை போன்ற திட்டங்களின் மூலம் சிஏபிஎஃப் வீரர்களின் வாழ்க்கையை எளிதாக்கி வருகிறது என்று திரு அமித் ஷா கூறினார். கடந்த 10 ஆண்டுகளில், மத்திய ஆயுத போலீஸ் படைகளின் (சிஏபிஎஃப்) நலனுக்காக மோடி அரசு 41 லட்சத்துக்கும் மேற்பட்ட ஆயுஷ்மான் அட்டைகளை உருவாக்கியுள்ளது, இதன் மூலம் ரூ.1600 கோடி செலுத்தப்பட்டுள்ளது என்று அவர் கூறினார். இதனுடன், 13,000 வீடுகள், 113 பாசறைகள் மற்றும் இ-ஆவாஸ் போர்டல் உருவாக்கப்பட்டு, ஆயிரக்கணக்கான வீடுகள் ஒதுக்கப்பட்டுள்ளன. இதுவரை 6 லட்சத்து 31 ஆயிரத்து 346 படை வீரர்கள் சிஏபிஎஃப் மின்னணு வீட்டுவசதி போர்ட்டலின் பலனைப் பெற்றுள்ளனர் என்று அவர் கூறினார்.

Leave a Reply