விமானப்படையின் சிறப்புப் படையான கருட்’ கமாண்டோக்கள் பயிற்சியை வெற்றிகரமாக முடித்ததைக் குறிக்கும் வகையில், கருஞ்சிவப்பு தொப்பி (மெரூன் பெரெட்) அணிந்து செல்லும் சம்பிரதாய அணிவகுப்பு இன்று (21 டிசம்பர் 2024) சண்டிநகர் விமானப்படை நிலையத்தின் கருட் ரெஜிமென்டல் பயிற்சி மையத்தில் (GRTC) நடைபெற்றது.
இந்த நிகழ்வின் சிறப்பு விருந்தினராக விமானப் பணியாளர் செயல்பாடுகளின் (போக்குவரத்து – ஹெலிகாப்டர்) துணைத் தலைவர் அணிவகுப்பை பார்வையிட்டார்.
சிறப்பு விருந்தினர் பேசுகையில் ‘கருட்’ வீரர்களுக்கு அவர்களின் வெற்றிகரமான தேர்ச்சிக்கு வாழ்த்து தெரிவித்தார். இளம் கமாண்டோக்களிடையே உரையாற்றிய அவர் , வேகமாக மாறிவரும் பாதுகாப்பு சூழ்நிலைக்கு ஏற்ப சிறப்புப் படை திறன்களை மேம்படுத்துவது, கடுமையான பயிற்சி அளிப்பது ஆகியவற்றின் முக்கியத்துவத்தை வலியுறுத்தினார். வெற்றி பெற்ற ‘கருட்’ பயிற்சியாளர்களுக்கு மெரூன் பெரட், கருட் தேர்ச்சி பேட்ஜ் ஆகியவற்றை வழங்கிய அவர், விருது பெற்றவர்களுக்கு கோப்பைகளையும் வழங்கினார்.
மெரூன் பெரெட் சடங்கு அணிவகுப்பு என்பது ‘கருட்’ வீரர்களுக்கு பெருமை, சாதனையின் தருணமாகும். உயரடுக்கு ‘கருட்’ படையில் இணைந்துள்ள ‘இளம் சிறப்புப் படையினர், இந்திய விமானப்படையின் செயல்பாட்டுத் திறனுக்கு மேலும் பலம் சேர்ப்பார்கள்.
திவாஹர்