குஜராத்தின் போர்பந்தரில் சுரங்க அமைச்சகம் வெற்றிகரமாக ஏற்பாடு செய்த கடல் பகுதியின் கனிமத் தொகுதிகள் ஏலம்.

இந்தியாவின் முதல் கடலோரப் பகுதிகளுக்கான கனிமத் தொகுதிகளுக்கான ஏல செயல்முறையை வெளியிட, குஜராத்தின் போர்பந்தரில், சுரங்க அமைச்சகம் இன்று ஒரு பிரத்யேக ரோட் ஷோவை  வெற்றிகரமாக ஏற்பாடு செய்தது. இந்த நிகழ்வு இந்தியாவின் கடல் பகுதிகளின் கனிம வளங்களைத் திறப்பதில், தொழில்துறை தலைவர்கள், முக்கிய பங்குதாரர்கள் மற்றும் அரசு பிரதிநிதிகளை ஒன்றிணைப்பதில் குறிப்பிடத்தக்க படியாக அமைந்தது.

இணைச் செயலாளர் திரு விவேக்  பாஜ்பாய் ,இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி மற்றும் உள்கட்டமைப்பு மேம்பாட்டிற்கு ஆதரவாக கடல்கடந்த கனிம வளங்களை திறப்பதன் முக்கியத்துவத்தை அவர் வலியுறுத்தினார்.

சுரங்க அமைச்சகத்தின் செயலாளர் திரு வி.எல்.காந்த ராவ், இந்திய அரசின் உரையில், இந்தியாவின் கடல் பகுதிகளில் சுண்ணாம்பு-சேறு சுரங்கத்தின் உருமாறும் திறனை எடுத்துரைத்தார். சிமென்ட் உற்பத்திக்கான ஒரு முக்கிய மூலப்பொருளான சுண்ணாம்பு-சேற்றின் முக்கிய பங்கை அவர் விளக்கினார்.

 குஜராத்தின் கடற்கரையில் உள்ள பரந்த சுண்ணாம்பு-சேறு படிவுகளை மையமாகக் கொண்டு முக்கிய தொழில்நுட்ப கண்டுபிடிப்புகளை வழங்கியது. தடையற்ற பங்கேற்பிற்காக வடிவமைக்கப்பட்ட வலுவான மற்றும் வெளிப்படையான ஏல தளத்தை உலோக ஸ்கிராப் வர்த்தக கழகம்  காட்சிப்படுத்தியது.

ரோட்ஷோ, சுரங்கத்தில் புதுமை மற்றும் வெளிப்படைத்தன்மைக்கான அரசின் உறுதிப்பாட்டை பிரதிபலிக்கிறது, நிலையான கடல் வள பயன்பாடு மற்றும் புதிய ஒத்துழைப்புகளுக்கு வழி வகுக்கிறது.

Leave a Reply