மத்திய மின்சாரம், வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற விவகாரங்கள் அமைச்சர் திரு மனோகர் லால் கவரட்டியில் இன்று லட்சத்தீவு யூனியன் பிரதேசத்தின் மின்சாரத் துறையின் செயல்பாடுகள் குறித்து ஆய்வு செய்தார்.
இந்தக் ஆய்வுக் கூட்டத்தில் லட்சத்தீவு யூனியன் பிரதேச நிர்வாகி திரு பிரபுல் படேல் கலந்து கொண்டார். இதில் யூனியன் பிரதேச நிர்வாகத்தின் மூத்த அதிகாரிகள், மத்திய அரசின் உயர் அதிகாரிகள் மற்றும் பவர் ஃபைனான்ஸ் நிறுவனத்தின் அதிகாரிகளும் கலந்து கொண்டனர்.
இந்த ஆய்வுக் கூட்டத்தில், லட்சத்தீவு யூனியன் பிரதேசத்திற்கான மின்சாரத் துறை விவகாரங்கள் குறித்து விரிவாக விவாதிக்கப்பட்டது. இந்தத் தீவில் மின் உற்பத்தியின் நிலை, உற்பத்தி ஆதாரம், செயல்திறன், மின்சாரத் தேவை, விநியோகம் தொடர்பான பிரச்சினைகள் குறித்து விவாதிக்கப்பட்டது. நிலத்தில் நிர்மாணம் செய்யப்படும் சூரிய சக்தி மின் உற்பத்தி திட்டத்தின் நிலை குறித்தும் இதில் விவாதிக்கப்பட்டது.
தீவுக்கான தனது அரசு முறைப் பயணம் இந்த யூனியன் பிரதேசத்தில் உள்ள பிரச்சனைகளுக்கு தீர்வு காணவும், யூனியன் பிரதேசங்களின் குடிமக்களுக்கான சேவைகளை மேம்படுத்துவதற்கு மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து அடையாளம் காணவும் உதவிடும் என்று மத்திய மின்சாரம், வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற விவகாரங்கள் துறை அமைச்சர் திரு மனோகர் லால் குறிப்பிட்டார்.
திவாஹர்