பிரதமரின் தேசிய பாலகர் விருதை குடியரசுத் தலைவர் வழங்கினார்.

குடியரசுத் தலைவர் மாளிகையின் கலாச்சார மையத்தில் இன்று (டிசம்பர் 26, 2024) நடைபெற்ற விழாவில், குடியரசுத் தலைவர்  திருமதி திரௌபதி முர்மு, ஏழு பிரிவுகளில் 17 குழந்தைகளுக்கு அவர்களின் மகத்தான சாதனைகளுக்காக பிரதமரின் தேசிய பாலகர் விருதை வழங்கினார்.

இந்நிகழ்ச்சியில் பேசிய குடியரசுத் தலைவர், விருது பெற்ற அனைவருக்கும் வாழ்த்துகள் தெரிவிப்பதாகவும், ஒட்டுமொத்த நாடும்,  சமுதாயமும்  அவர்களால் பெருமை அடைவதாகவும்  கூறினார். குழந்தைகள் அசாதாரணமான பணிகளைச் செய்துள்ளனர், அற்புதமான சாதனைகளை அடைந்துள்ளனர். எல்லையற்ற திறன்களைக் கொண்டுள்ளனர். ஒப்பிடமுடியாத பண்புகளைக் கொண்டுள்ளனர். அவர்கள் நாட்டின் குழந்தைகளுக்கு  முன்னுதாரணமாகத்  திகழ்கிறார்கள் என்று அவர் குறிப்பிட்டார்.

வாய்ப்புகளை வழங்குவதும், குழந்தைகளின் திறமைகளை  அங்கீகரிப்பதும்  நமது பாரம்பரியத்தின் ஒரு பகுதியாக உள்ளது என்று குடியரசுத் தலைவர் கூறினார் . இந்த பாரம்பரியத்தை மேலும் வலுப்படுத்த வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார். 2047-ம் ஆண்டில் நாட்டின் சுதந்திரத்தின் நூற்றாண்டு விழாவை நாம் கொண்டாடும் போது, இந்த விருது வென்றவர்கள் நாட்டின் அறிவொளி பெற்ற குடிமக்களாக இருப்பார்கள் என்றும் அவர் கூறினார். அத்தகைய திறமையான சிறுவர்களும், சிறுமிகளும் வளர்ந்த இந்தியாவை உருவாக்குபவர்களாக மாறுவார்கள் என்று குடியரசுத் தலைவர் குறிப்பிட்டார்.

Leave a Reply