பேரிடர் எச்சரிக்கை” முறைகளில் இந்தியா தற்போது உலகத் தலைமையிடத்தில் உள்ளது, உலக நாடுகளுக்கும் பகிர்ந்து கொள்கிறது.

அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறை இணை அமைச்சர் (தனி பொறுப்பு); புவி அறிவியல் மற்றும் பிரதமர் அலுவலகம், அணுசக்தித் துறை, விண்வெளித் துறை, பணியாளர், பொதுமக்கள் குறைகள் மற்றும் ஓய்வூதியங்கள் துறை அமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங், 2004-ம் ஆண்டு இந்தியப் பெருங்கடல் சுனாமியின் 20-வது ஆண்டு நிறைவை நினைவுகூர்ந்தார். இந்தியா தற்போது “பேரிடர் எச்சரிக்கையில்” உலகளாவிய தலைமைத்துவமாக உருவெடுத்துள்ளது என்றும், உலகெங்கிலும் உள்ள பிற நாடுகளுக்கும் தனது சேவையை வழங்குவதாகவும் கூறினார்.

2004-ம் ஆண்டு ஏற்பட்ட சுனாமியைத் தொடர்ந்து பெருங்கடல் தகவல் சேவைக்கான இந்திய தேசிய மையம் தொடங்கப்பட்டது என்று அவர் தெரிவித்தார். 2014-ம் ஆண்டுக்குப் பிறகு, பிரதமர் திரு. நரேந்திர மோடியின் ஆதரவு மற்றும் முன்னுரிமையுடன், உலகின் அதிநவீன நிறுவனமாக அங்கீகரிக்கப்படும் அளவுக்கு இது வேகமாக முன்னேறியது என்றும் அமைச்சர் நினைவுகூர்ந்தார்.

கடல் ஆராய்ச்சி மற்றும் பேரிடர் தயார்நிலை ஆகியவற்றில் இந்தியாவின் மிகப்பெரிய முன்னேற்றம் குறித்தும் அவர் எடுத்துரைத்தார்.

உலகத் தரம் வாய்ந்த பேரிடர் எச்சரிக்கை அமைப்புகளை வழங்குவதில் உலகத் தலைமைத்துவமாக நமது நாடு உருவெடுத்துள்ளதாக குறிப்பிட்ட அமைச்சர், பாதுகாப்பு மற்றும் நிலைத்தன்மையை வளர்ப்பதில் அறிவியல் முன்னேற்றங்களின் முக்கிய பங்கை சுட்டிக் காட்டினார்.

Leave a Reply