தமிழகத்தில் தினம்தோறும் பாலியல் வன்கொடுமை அதிகரித்துக்கொண்டே போகிறது!-தவறு செய்தவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் மீது உரிய விசாரனையை செய்து காலம் தாழ்த்தாமல் உடனடியாக தண்டனை வழங்க வேண்டும்!-ஜி.கே.வாசன்

அண்ணா பல்கலைக் கழகத்தின் மாணவி ஒருவர் பல்கலைக் கழக வளாகத்திற்குள்ளேயே பாலியல் வன்கொடுமை நடந்ததாத வரும் செய்திகள் மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்துகிறது. பாரம்பரியமிக்க ஒரு பல்கலைக்கழகத்தில் பாதுகாப்பு இல்லாத சூழல் நிலவுவது மிகுந்த வருத்தத்தை அளிக்கிறது.

காவல்துறையின் விசாரணையில் பாலியல் வன்கொடுமையில் ஈடுப்பட்டது கோட்டூர்புரத்தை சேர்ந்தவன் என்பது தெரியவந்துள்ளது. மூன்றாம் நபர் ஒருவர் இரவில் பல்கலைக்கழக வளாத்திற்குள் நுழைந்தது பல்கலைக்கழகத்தில் பாதுகாப்பு இன்மையை காட்டுகிறது. உடனடியாக பல்கலைக்கழகமும், தமிழக அரசும் பாதுகாப்புகளை பலப்படுத்த வேண்டும்.

தமிழகத்தில் தினம்தோறும் பாலியல் வன்கொடுமை அதிகரித்துக்கொண்டே போகிறது. இது காவல்துறை மற்றும் அரசின் மெத்தன போக்கையே காட்டுகிறது. இதுபோன்ற வன்கொடுமைகள் மேலும் நிகழாமல் இருக்க அரசு தண்டனைகளை கடுமையாக்க வேண்டும். குற்றவாளி சட்டத்தின் பிடியில் இருந்து தப்பிக்க முடியாதவாறு உரிய தண்டனையை உடனடியாக வழங்க வேண்டும். அது மற்றவர்களுக்கு பாடமாக அமைய வேண்டும்.

தமிழகத்தில் குற்றங்கள் அதிகரித்து, வன்முறை மாநிலமாக மாறிவருவது மக்களிடையே மிகந்த அச்சத்தையும், வருத்தத்தையும் உண்டாக்கிறது. தமிழக அரசு இனிமேலும் தாமதிக்காமல் தவறு செய்தவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் மீது உரிய விசாரனையை செய்து காலம் தாழ்த்தாமல் உடனடியாக தண்டனை வழங்க வேண்டும் என்று தமிழ் மாநில காங்கிரஸ் சார்பாக கேட்டுக்கொள்கிறேன். மாணவர்கள் எப்பொழுதும் முன்னெச்சரிக்கையோடு இருக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.

இவ்வாறு தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி தலைவர் ஜி.கே. வாசன் தமது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

Leave a Reply