ஜனவரி 2ம் தேதி முதல் சென்னை மின்சார ரயில்களின் அட்டவணை மாற்றம்: தெற்கு ரயில்வே அறிவிப்பு.

ஜனவரி 1, 2025 புதிய ரயில் அட்டவணை அமலுக்கு வருகிறது. இந்திய ரயில்வே அறிமுகம் செய்துள்ள புதிய ரயில் அட்டவணையில் ரயில் வழித்தட வரைபடம், ரயில் நிலையம் மற்றும் ரயில்களின் எண்கள், ரயில்களின் பெயர், பயண நேரம் உள்ளிட்டவை இடம்பெற்றுள்ளன. மேலும் ரயில் டிக்கெட் முன்பதிவு தொடர்பாக விவரங்கள், தட்கல், டிக்கெட் கட்டணம் திரும்ப பெறும் முறைகள், ரயில் பயண சலுகைகள், சிறப்பு பயண திட்டங்கள் ஆகியவையும் இருக்கின்றன. இந்நிலையில் சென்னையில் அனைத்து மின்சார ரயில்களின் அட்டவணை ஜனவரி 2ம் தேதி முதல் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. கடற்கரை – செங்கல்பட்டு, கும்மிடிப்பூண்டி உள்பட அனைத்து வழித்தட மின்சார ரயில்களின் நேரம் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

Leave a Reply