திருவள்ளுவர் வெறும் சிலையல்ல. திருக்குறள் வெறும் நூல் அல்ல. நம்முடைய வாழ்க்கைக்கான வாளும், கேடயமும். அது நம்மைக் காக்கும், நம்மை அழிக்க வரும் தீமைகளை தடுக்கும். நம்மை மட்டுமல்ல, காவி சாயம் பூச நினைக்கிற தீய எண்ணங்களையும் விரட்டியடிக்கும்” என்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார். மேலும், திருக்குறள் தொடர்பான புதிய அறிவிப்புகளையும் அவர் வெளியிட்டார்.
தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று (டிச.31) கன்னியாகுமரியில் நடந்த திருவள்ளுவர் சிலை வெள்ளி விழாவில், திருக்குறள் ஓலைச்சுவடிகள், புத்தகங்கள், மின்நூல்கள் மற்றும் திருவள்ளுவர் சிலை பற்றிய புகைப்படக் கண்காட்சியை திறந்து வைத்தார். திருவள்ளுவர் சிலை வெள்ளி விழா சிறப்பு மலரை வெளியிட்டு, திருவள்ளுவர் சிலை வெள்ளி விழா வளைவுக்கு அடிக்கல் நாட்டினார். திருக்குறள் சார்ந்த போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவியர்களுக்கு பரிசுத் தொகை வழங்கினார்.
எஸ்.திவ்யா