2023-ம் ஆண்டில், உலகின் ஜவுளி மற்றும் ஆயத்த ஆடை ஏற்றுமதியில் இந்தியா 6 வது பெரிய நாடாக உள்ளது. இந்தியாவின் மொத்த ஏற்றுமதியில் கைவினைப் பொருட்கள் உள்ளிட்ட ஜவுளி மற்றும் ஆயத்த ஆடையின் பங்கு 2023-24 ஆம் ஆண்டில் குறிப்பிடத்தக்க அளவில் 8.21% ஆக உள்ளது. உலக ஜவுளி மற்றும் ஆடை வர்த்தகத்தில் நமது நாட்டின் பங்கு 3.9 சதவீதமாக உள்ளது. இந்தியாவின் முக்கிய ஜவுளி மற்றும் ஆடை ஏற்றுமதி இலக்கு நாடுகளாக அமெரிக்கா, ஐரோப்பிய ஒன்றியம் ஆகியவை உள்ளன. மொத்த ஜவுளி மற்றும் ஆடை ஏற்றுமதியில் சுமார் 47% பங்கை ஜவுளிப்பிரிவு கொண்டுள்ளது.. இந்தியா ஜவுளி மற்றும் ஆடை ஏற்றுமதியில், முக்கிய நாடாக உள்ளதுடன், வர்த்தக உபரியையும் அனுபவிக்கிறது. இறக்குமதியின் பெரும்பகுதி மறு ஏற்றுமதிக்காக அல்லது தொழில்துறை மூலப்பொருளின் தேவைக்காக பயன்படுத்தப்படுகிறது.
ஏற்றுமதி என்பது தேவை மற்றும் வழங்கலின் செயல்பாடாக இருப்பதோடு உலகளாவிய தேவை, உள்நாட்டு நுகர்வு, தேவைக்கான ஆர்டர்கள் தளவாடங்கள் போன்ற காரணிகளைச் சார்ந்தும் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. பல புவிசார் அரசியல் சூழ்நிலைகளால் (செங்கடல் நெருக்கடி, பங்களாதேஷ் நெருக்கடி போன்றவை) ஏற்றுமதியும் பாதிக்கப்படுகிறது. 2024-ம் நிதியாண்டின் ஏற்றுமதியானது தொடக்கத்தில் குறைவாக இருந்தது, முக்கியமாக செங்கடலைச் சுற்றியுள்ள புவிசார் அரசியல் நெருக்கடிகள் காரணமாக, 2024 ஜனவரி, பிப்ரவரி மற்றும் மார்ச் மாதங்களில் ஏற்றுமதி இ பாதிக்கப்பட்டு இருந்தது.
ஜவுளி மற்றும் ஆடை (கைவினைப் பொருட்கள் உட்பட) ஒட்டுமொத்த ஏற்றுமதி 2024-25 நிதியாண்டின் ஏப்ரல்-அக்டோபர் காலகட்டத்தில் (21,358 மில்லியன் டாலர்) 2023-24 நிதியாண்டின் இதே காலகட்டத்துடன் (20,007 மில்லியன் டாலர்) ஒப்பிடும்போது 7% வளர்ச்சியைக் கண்டுள்ளது.
2024-25 நிதியாண்டின் ஏப்ரல்-அக்டோபர் காலகட்டத்தில் மொத்த ஏற்றுமதியில் (21,358 மில்லியன் டாலர்) 8,733 மில்லியன் டாலர் ஏற்றுமதியுடன் ஆயத்த ஆடைகள் வகை மிகப்பெரிய பங்கைக் கொண்டுள்ளது (41%), அதைத் தொடர்ந்து பருத்தி ஜவுளி (33%, 7,082 மில்லியன் டாலர்), செயற்கை இழை ஜவுளி (15%, 3,105 மில்லியன் டாலர்) உள்ளன.
2023-24 நிதியாண்டின் இதே காலத்துடன் ஒப்பிடும்போது 2024-25 நிதியாண்டின் ஏப்ரல்-அக்டோபர் காலகட்டத்தில் அனைத்து முக்கிய பொருட்களிலும் ஏற்றுமதியின் வளர்ச்சி காணப்படுகிறது.
2023-24 நிதியாண்டில் இந்தியாவின் ஜவுளி மற்றும் ஆடை பொருட்களின் இறக்குமதி (8,946 மில்லியன் டாலர்) 2022-23 நிதியாண்டுடன் ($10,481 மில்லியன்) ஒப்பிடும்போது சுமார் 15% குறைந்துள்ளது.
ஜவுளி மற்றும் ஆடை (கைவினைப் பொருட்கள் உட்பட) ஒட்டுமொத்த இறக்குமதி 2024-25 நிதியாண்டின் ஏப்ரல்-அக்டோபர் காலகட்டத்தில் (5,425 மில்லியன் டாலர்) 2023-24 நிதியாண்டின் இதே காலகட்டத்துடன் (5,464 மில்லியன் டாலருடன்) ஒப்பிடும்போது 1% குறைந்துள்ளது.
திவாஹர்